"எது ஆதார் கார்டு இருந்தா தான் பந்தியா?".. திருமண மண்டபத்தில் நடந்த ட்விஸ்ட்!!.. விருந்தாளிகளை சோதிக்க வெச்ச முடிவு!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலகட்டத்தில், திருமணத்தை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள், இணையத்தில் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

Advertising
>
Advertising

Also Read | "பல தடவ Resume அனுப்பியும் வேலை கிடைக்கல".. வித்தியாசமா யோசிச்ச பொண்ணு.. கேக் பார்சலை திறந்த நிறுவனத்திற்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!

திருமண தேதி குறித்த நாளில் இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து மிகவும் புதுமையாக செய்ய தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

திருமணத்திற்கான போட்டோ ஷூட் தொடங்கி, திருமண அழைப்பிதழ், சாப்பாடு, உடை, பேனர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் தான் திருமண வீட்டார் தேர்வு செய்கின்றனர்.

இப்படி அடிக்கடி திருமணத்தை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள், நெட்டிசன்கள் பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில், திருமண நாளன்று மண்டபத்தில் வைத்து சமீபத்தில் நடந்த சம்பவம் தொடர்பான செய்தி ஒன்று, இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோஹாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமண விழா ஒன்று நடைபெற்றுள்ளது.

இதனிடையே, இந்த திருமண விழாவுக்கு வந்த விருந்தினர்கள் ஆதார் கார்டு வைத்திருந்தால் தான் உணவு வழங்கப்படும் என்ற நிபந்தனை போட்டு இருந்த சம்பவம் தான் தற்போது பலரின் கருத்துக்களை சம்பாதித்து வருகிறது. ஹசன்பூர் பகுதியில் வைத்து நடந்த திருமண விழாவில், சம்பந்தப்பட்ட மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது, திடீரென சாப்பிட வந்த விருந்தாளிகளிடம் ஆதார் கார்டை காண்பிக்கும் படி நிபந்தனையும் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆதார் இருந்தவர்களுக்கு மட்டுமே சாப்பாடு பரிமாறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. திருமண நிகழ்வில் கலந்து கொள்ள எதற்கு ஆதார் என புரியாமல், அங்கு வந்த விருந்தாளிகள் பலரும் எரிச்சலுடன் குழம்பி போயுள்ளனர்.

மேலும், திருமணத்தில் ஆதார் கார்டு கேட்டதற்கான காரணம் தொடர்பாக வெளியான தகவலின் படி, அந்த மண்டபத்தில் சகோதரிகள் இரண்டு பேருக்கு ஒரே நாளில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் விருந்தினர் வந்ததால் திணறி போன பெண் வீட்டார் என்ன செய்வதென தெரியாமல் குழம்பி போயுள்ளனர்.

சாப்பாடு விஷயத்திலும் கடும் நெருக்கடி உருவானதால் தான், திடீரென ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், அதிகம் வைரல் ஆகவும் இணையத்தில் மாறி உள்ளது.

Also Read | சாப்பிட சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி மகள்.. 10வது படித்த 'கூலி தொழிலாளர்' தந்தையின் அசாத்திய கண்டுபிடிப்பு.!! நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்

WEDDING, GUESTS, AADHAR CARD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்