“வீட்லயே இருக்குறது கொஞ்சம் கஷ்டம்தான்... போர் அடிக்கும்.. நமக்கு வேற வழியில்ல!” - உத்தவ் தாக்கரே!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுன் உத்தரவு உங்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும் இருப்பினும் நமக்கு வேறு வழியில்லை, கொரோனாவில் இருந்த தப்பிக்க மக்கள் வீட்டில் இருந்துதான் ஆக வேண்டும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கொரோனாவுக்கு அதிகம் பேர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்துமுள்ளனர். இந்தநிலையில் நோய்த்தொற்றை தடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனைக்கென்று பிரத்யேகமாக தயார் படுத்தப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி காணொளி காட்சி மூலம் மாநில மக்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதனால் அவர்களுக்கு அலுப்பு தட்ட கூடுமென்றும், ஆனால் தங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் தங்களை மன்னிக்குமாறு தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் வீட்டில் இருந்துதான் ஆகவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தவிர ஏதேனும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் வழக்கமாக செல்லும் மருத்துவமனைகளை தவிர்த்துவிட்டு அரசாங்கத்தால் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் கொண்ட மருத்துவமனைகளை அணுகவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தமிழக மக்களுக்கு துளிர்விடும் நம்பிக்கை’... ‘கொரோனாவில் இருந்து குணமடைந்து’... ‘டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 74 வயது சென்னை பாட்டி’... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புகைப்படம்!
- 'இந்த போர் எப்ப முடியும்!?'... கொரோனா சிகிச்சையில்... மருத்துவ தம்பதியினரின்... இதயத்தை நொறுக்கும் பாசப் போராட்டம்!
- 'கொரோனா' பீதியால் 'ரூபாய்' நோட்டுகளை 'சோப்பு' நீரில் கழுவும் வியாபாரி! .. 'வீடியோ'!
- 'கடைய எப்ப சார் திறப்பீங்க?' பாணியில்... அழிச்சாட்டியம் செய்யும் மதுப்பிரியர்கள்!... செக் வைத்த அதிகாரிகள்!
- கொரோனா 'பாசிட்டிவ்' ... ஆனால் 'மருத்துவமனையில்' இருந்து எஸ்கேப் ... தேடுதல் வேட்டையில் 'போலீசார்' ... அச்சத்தில் 'மக்கள்'!
- 'காரை வீடாக்கிய டாக்டர்...' 'ஃபேமிலி கூட வீடியோ கால் பண்ணி பேசுறேன்...' மனைவி, குழந்தைக்கு கொரோனா வரக்கூடாது என டாக்டர் எடுத்த முடிவு...!
- ‘இது கடினமான சூழ்நிலை தான்’... ‘ஆனாலும், இது மிகவும் முக்கியம்’... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவு’!
- 'இந்தியா' உள்பட சில நாடுகளில் மட்டும்... '6 மடங்கு' வரை 'குறைவாகவுள்ள' கொரோனா 'இறப்பு' விகிதம்... ஆய்வில் வெளியாகியுள்ள 'காரணம்'...
- ஏப்ரல் 14-க்கு பின்னரும்... 'ஊரடங்கு' தொடர வாய்ப்பு உள்ளதா?...பிரதமர் மோடியின் 'மனநிலை' இதுதான்!
- VIDEO: 'மோடியைப் பின்பற்றினால்... ஓடிப்போகும் கரோனா!'... தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் கொரோனா விழிப்புணர்வு கவிதை!... வைரல் வீடியோ!