‘அய்யா உங்க சாப்பாடு வேண்டாம்’!.. உணவு இடைவேளையில் அதிகாரிகளை அதிரவைத்த விவசாயிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் போது அரசு கொடுத்த உணவை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய விவசாய சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் வரலாறு காணாத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டெல்லி வரை பேரணியாக சென்றுள்ள அவர்கள், உணவுகளை சாலைகளிலேயே சமைத்தும், கிடைத்த இடத்தில் உறங்கியும் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து செல்கின்றனர்.

இந்தநிலையில் வேளாண்துறை அமைச்சகம் சார்பில் இன்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்காக டெல்லி விஞ்ஞான பவனில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது உணவு இடைவேளையில் அரசு கொடுத்த டீ மற்றும் உணவை விவசாயிகள் வாங்க மறுத்தனர். ‘எங்களுக்கான உணவை நாங்களே கொண்டு வந்துள்ளோம்’ என தாங்கள் கொண்டுவந்த உணவுகளை விவசாயிகள் பங்கிட்டு சாப்பிட்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்