திடீர்னு கடல்ல உருவான புயல்.. தூக்கி வீசப்பட்ட படகுகள்.. ஷாக்-ஆகிப்போன மீனவர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் கடலில் உருவான புயலால் படகுகள் தூக்கி வீசப்பட்டது, அந்தப் பகுதி மீனவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "எபோலா மாதிரியே இன்னொரு வைரஸ்.. இரண்டு பேருக்கு பாசிட்டிவ் ஆகிருக்கு"..பகீர் அறிவிப்பை வெளியிட்ட நாடு..!

தென்மேற்கு பருவமழை

ஜூன் முதல் செப்டம்பர் ஆகிய மாதங்களில் வட மற்றும் மத்திய இந்தியாவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இதனை ஈடுகட்ட இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து காற்றுவீசும். அப்போது, நீர்த்துளிகளை கொண்டுள்ள காற்று மலைகளின் மீது மோதி குளிர்வடைந்து மழையாகப் பெய்யும். கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகள், கொங்கன் கடற்கரை ஆகிய இடங்களில் இந்த பருவகாலத்தில் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது.

இந்நிலையில், கேரளாவை ஒட்டிய கடற்கரையில் அவ்வப்போது புயல்கள் உருவாகி வருகின்றன. தரைப்பகுதியில் புயல்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், கடலில் புயல்கள் நம்ப முடியாத அளவுக்கு ஆக்ரோஷமாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

புயல்

கடந்த வெள்ளிக்கிழமை கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள வெள்ளாயில் மீன்பிடித் துறைமுகத்தில் வித்தியாசமான புயல் உருவாகியுள்ளது. துறைமுகத்தின் கரையில் பாதுகாப்பான இடத்தில் மீனவர்கள் நின்றிருக்கிறார்கள். அப்போது, கடற்கரையில் படகுகளுக்கு பின்னால் புயல் உருவாவதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அந்த பகுதியில் படகில் இருந்தவர்களை உடனே கரைக்கு வருமாறு எச்சரித்துள்ளனர்.

கொஞ்ச நேரத்தில், கடலில் காற்று பலமாக வீசியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து நீர் மேற்புறத்தில் எழும்பியிருக்கிறது. காற்றின் வேகம் கணிசமான முறையில் அதிகரிக்கவே, நின்றுகொண்டிருந்த படகுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பறந்த மேற்கூரைகள்

புயல் உருவான பகுதிக்கு அருகில் இருந்த படகுகளின் மேற்கூரைகள் சேதமடைந்து காற்றில் பறந்தன. இதனைக்கண்ட மீனவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். இருப்பினும் நல்ல வேலையாக இந்த புயலினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புயல் உருவான இடத்தில் நின்றிருந்த படகுகளில் மீனவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.

செங்குத்தாக காற்று சுழல்வதால் இந்த சூறாவளி உருவாவதாகவும், இதனை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும் தெரிவித்திருக்கிறார்கள் நிபுணர்கள்.

Also Read | நம்பர் 1 Wanted கிரிமினல்.. பிடிச்சுக்கொடுத்தா 50 ஆயிரம் பணம்.. 13 வருஷமா தேடப்பட்ட தம்பதி.. லாஸ்ட்ல போலீஸ் விரிச்ச வலையில் வசமாக சிக்கிய சம்பவம்..!

KERALA, WATERSPOUT, BOAT, KOZHIKODE COAST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்