‘ட்ரெயினிங் இடைவேளையில்’... ‘நாகின் டான்ஸ் ஆடிய'... ‘கவர்மென்ட் டீச்சர்ஸ்’... ‘வைரலான வீடியோவால் நடந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாபயிற்சி வகுப்பு இடைவேளையின்போது அரசு ஆசிரியர்கள் பாம்பு நடனம் எனப்படும், நாகின் டான்ஸ் ஆடியதால், ஆசிரியை ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு, கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நடைப்பெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி வகுப்பு இடைவேளையின்போது, ஆசிரியை ஒருவருடன், அங்கிருந்த 2 ஆசிரியர்கள் சேர்ந்து, பாம்பு போன்று நாகின் நடனமாடினர். இதனை மற்ற ஆசிரியர்கள் பார்த்து ரசித்தவாறு இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.
இதனைப் பார்த்த ஜலோர் மாவட்ட கல்வி அதிகாரி, பயிற்சி வகுப்பில் நடனமாடிய பெண் ஆசிரியரை, கடந்த புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் ஆசிரியை உடன் நடனமாடிய 2 ஆசிரியர்களும், புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் என்பதால், இதுறித்து விளக்கம் கேட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மாவட்ட கல்வி அதிகாரி, ‘நடனமாடுவதிலோ, விளையாடுவதிலோ தவறு இல்லை. ஆனால் விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்.
இதனிடையே ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு, பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது தானே, அவர்கள் நடனமாடினார்கள். அரசு ஊழியர்கள் என்றால், அவர்களது சக ஊழியர்களுடன் நேரத்தை நல்ல முறையில் செலவிடக்கூடாதா’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சஸ்பென்ட் உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஆசிரியைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..
- ‘ஸ்பெஷல் கிளாஸ் சென்ற’... ‘5-ம் வகுப்பு மாணவிக்கு’... ‘பள்ளியில் நேர்ந்த சோகம்’... ‘அதிர்ச்சியடைந்த பெற்றோர்’!
- ‘அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து’.. ‘பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து’.. ‘நொடிப்பொழுதில் குழந்தைகளுக்கு நடந்த பயங்கரம்’..
- ‘7 வயது சிறுவனைக் கடத்திய 10ஆம் வகுப்பு மாணவன்’.. ‘சென்று பார்த்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி’..
- ‘குழந்தைகள் தினம்தான்’.. ‘ஆனால் ஹோம்வொர்க் பெற்றோருக்கு’.. ‘பள்ளிக் கல்வித்துறையின் வித்தியாசமான முயற்சி’..
- ‘மாணவர்களால் ஆசிரியைக்கு’.. ‘வகுப்பறையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்’..
- ‘திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்’..
- 'கையில் தட்டு...வயிற்றில் பசி.. கண்களில் ஏக்கம்'.. பெண் குழந்தையின் வாழ்வில் ஒளி ஏற்றிய புகைப்பட பத்திரிகையாளர்!
- 'கால் தவறி விழுந்த மூதாட்டி'... 'கண் இமைக்கும் நேரத்தில்'... 'அரசுப் பேருந்தால் நிகழ்ந்த சோகம்'!
- '4-ஆம் வகுப்பு மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி'.. ஆசிரியர் செய்த காரியம்.. தர்ம அடி கொடுத்து மக்கள் எடுத்த முடிவு!