‘தாகத்தை மட்டுமில்ல மனசையும் நெரச்சிட்டீங்க சிங்’.. குவியும் பாராட்டுகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாலையில் செல்லும் மக்களுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கும் முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் மக்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை தண்ணீர்தான். தமிழ்நாட்டில் தண்ணீர் பிரிச்சனை தீர்க்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். சென்னையின் நீர் ஆதாரங்களாக இருந்த புழல், வீராணம் போன்ற ஏரிகளில் நீர் வற்றி வரண்டு காணப்படுகிறது. இதனால் மக்கள் தண்ணீர் லாரிகளை நம்பி இருக்க வேண்டியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் குஜராத், மகாராஷ்ட்ரா, டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் படுமோசமாக காணப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீரை பூட்டுப் போட்டு பாதுகாக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு டெல்லி வாசிகள் இலவசமாக தண்ணீர் கொடுத்து உதவுகின்றனர். கடந்த சில நாள்களாகவே பலரும் இந்த உதவியை செய்து வருகின்றனர். முதியவர் ஒருவர் ஸ்கூட்டரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சாலையில் செல்பவர்களுக்கு இலவசமாக கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தண்ணீர் கேட்டு தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணை சரமாரியாக தாக்கிய பாஜக எம்.எல்.ஏ’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!
- ‘அடுத்த வாய்ப்பு வரும்போது இத கண்டிப்பா செய்யணும்’.. அதுக்கு உங்ககிட்ட எதாவது ஐடியா இருக்கா? அஸ்வினின் வைரல் ட்வீட்!
- தந்தையை கொன்று 25 துண்டுகளாக வெட்டிய மகன்..! போலிஸில் மகன் அளித்த பகீர் வாக்குமூலம்!
- ‘இருதரப்பினரிடையே மோதல், விபரீதத்தில் முடிந்த சம்பவம்’!.. அதிர வைக்கும் காரணம்!
- 'இந்திரா காந்தி மாதிரியே' நானும் தீர்த்துக் கட்டப்படலாம்: கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு!
- ‘ப்ளீஸ் இத பண்ண வேண்டாமே’..நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. வேண்டுகோள் வைத்த சென்னை குடிநீர் வாரியம்!
- 'ஓடுற பைக்கில்'...'காதல் ஜோடி' செஞ்ச செயல்'...அதிர்ச்சியை கிளப்பியிருக்கும் வீடியோ !
- திரைப்பட பாணியில் திடீரென திகில் கிளப்பிய காளை.. அலறியடித்து ஓடிய மக்கள்!
- ‘எனக்கு டிக்கெட் இல்லன்னா, அப்புறம் கட்சியவிட்டே போயிருவேன்’.. சொன்னபடி செஞ்ச பாஜக எம்.பி!
- தண்டவாளத்தை கடக்க முயற்சி.. தன்னுயிரை தியாகம் செய்து.. 3 உயிர்களை காப்பாற்றிய காவலர்!