நீங்க ஏன் சார் ஹெல்மெட் போடல..? கேள்வி கேட்ட இளைஞரை தாக்கிய போலீஸ்..! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகாரில் ஹெல்மெட் அணியாமல் வந்த காவல் அதிகாரியை கேள்வி எழுப்பிய இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் செப்டம்பர் 1 -ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அதிக அளவிலான அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் ஹரியானா, டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் 80 ஆயிரம் வரையில் அபராதம் வசூலிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பீகார் மாநிலம் ஷிசாக் காலணி சேர்ந்த கமல் குமார் என்பவரிடம் காவல் அதிகாரி ரோஷன் குமார் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி 11 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளார். இதனை அடுத்து ரோஷன் குமார் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றதைப் பார்த்த கமல் குமார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் ஹெல்மெட் அணியாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல் அதிகாரி ரோஷன் குமார், கமல் குமாரை தாக்கியுள்ளார். இது அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து காவல் அதிகாரி ரோஷன் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

POLICE, TRAFFICFINE, TRAFFICRULES, HELMET, BIHAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்