‘189 பயணிகளுடன் சென்ற விமானத்தின் டயர் வெடிப்பு’.. பதபதைக்கும் வீடியோ காட்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் வெடித்து நூலிழையில் உயிர்பிழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் விமான சேவையை செய்து வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி அளவில் துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு சுமார் 189 பயணுகளுடன் எஸ்ஜி 58 ரக விமானம் வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது தரையிறங்குவதற்கு முன்னதாக விமானத்தின் டயர் வெடித்துள்ளது.

இதனை அறிந்த விமானி உடனடியாக விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து விமானம் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் விரைந்து செய்யபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமான ஓடுதளத்தில் விமானத்தை சிறுது தூரம் விமானத்தை ஓடவிட்டு சாதூர்யமாக நிறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து பயணிகள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் பயணித்த அனைவரும் காயமின்றி நூழிலையில் உயிர் தப்பியுள்ளனர். இதேபோல் கடந்த ஆண்டு 200 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தின் டயர் திடீர்ரென வெடித்ததால் உடனடியாக சென்னை விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FLIGHT, JAIPUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்