எழுந்து நின்னு மரியாதை தரச் சொல்லி மருந்துக்கடை ஊழியரை தாக்கிய பாஜக பிரமுகர்! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனக்கு எழுந்து நின்று மரியாதை தரவில்லை என மருந்துகடை ஊழியரை பாஜக பிரமுகர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் , அம்மாநிலத்தின் பாஜக துணை தலைவருமாக இருந்தவர் ரேணு தேவி. இவருக்கு பினு என்ற சகோதரர் உள்ளார். இவர் பெட்டையா என்னும் இடத்தில் உள்ள மெடிக்கல் கடைக்கு மருந்து வாங்க சென்றுள்ளார்.

அப்போது கடையில் இருந்த ஊழியர் பினுவிற்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்காததாக கூறப்படுகிறது. இதனால் கோபமான பினு அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, பின்னர் சரமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக கூறிய ரேணு தேவி,‘எனக்கும் பினுவின் குடும்பத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. அவர்களுடன் பேசுவதை நிறுத்தி நீண்ட காலமாகிறது. இதுபோன்ற செயல்களை நான் எப்போதும் ஆதரிப்பதில்லை. தவறு யார் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்