'அவர் நல்லவர்.. அவர ஜெயிக்க வையுங்க'.. சமந்தா சொல்லும் லாஜிக்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே-19 வரை 7 கட்டமாக நடைபெறும் என்று முன்னமே அறிவிக்கப்பட்டது போலவே தொடங்கியது.

319 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் ஆந்திராவின் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கடும் போட்டியில் இருக்கின்றன. ஆந்திரப்பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவும் நடைபெறத் தொடங்கியது.

இந்த நிலையில் சென்னையில் படித்து வளர்ந்தவரும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவின் மனைவியும் மும்மொழிகளிலும் புகழ்பெற்றவருமான நடிகை சமந்தா, தனது ஆதரவு நிலைப்பாட்டினை அறிவித்துள்ளார். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெபல்லே சட்டமன்ற தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளருமான அனகனி சத்யா பிரசாத்துக்கு தன்னுடைய ஆதரவினை அளிப்பதாக நடிகை சமந்தா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் சமந்தா, “சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் அனகனி சத்யா பிரசாத் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  ‘அவர் யார் உங்கள் சொந்தக்காரரா?’ என்று ட்விட்டர்வாசி ஒருவர் கேட்டதற்கு, ‘ஆமாம், அவர் எனது குடும்ப நண்பர். மிகவும் நல்லவர். தனிப்பட்ட முறையில் எனது ஆதரவை அவருக்கு நான் அளிக்கிறேன். அவரது சகோதரி டாக்டர் மஞ்சுளாவும் நான் ஹைதராபாத்துக்கு வந்ததில் இருந்து எனக்கு இவர்களை நன்கு தெரியும்’ என்று கூறியுள்ளார்.

LOKSABHAELECTIONS2019, ELECTIONS, SAMANTHA, ACTRESS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்