'வாழ்நாளிலேயே இத பாக்க தான் காத்திருந்தேன்'... 'சுஷ்மா சுவராஜின் கடைசி நெகிழ்ச்சி 'ட்வீட்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக பதிவிட்ட ட்வீட் பலரையும் நெகிழ செய்துள்ளது. 

முன்னாள் மத்திய வெளியுறவு துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவாருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். அவர் அமைச்சராக இருக்கும் போதே ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்று ட்வீட் செய்தாலோ அல்லது வெளியுறவு தொடர்பான ட்வீட் ஏதுவாக இருந்தாலும், உடனே நடவடிக்கை எடுப்பதில் சுஷ்மா சுவராஜ் முன்னோடியாக செயல்பட்டு வந்தார்

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக காஷ்மீர் மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. என்னுடைய வாழ்நாளில் இந்த தருணத்தை பார்ப்பதற்காகத் தான் காத்திருந்தேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். 

TWITTER, SUSHMA SWARAJ, LIFETIME, LAST TWEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்