‘100 கிமீ நடைபயணம்’.. சாலையில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத ‘கர்ப்பிணி’.. குழந்தை பிறந்த ‘சில நிமிடத்தில்’ நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசொந்த ஊருக்கு நடந்த சென்றபோது கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தை சில நிமிடங்களில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜதின் ராம் (19)-பிந்தியா (18) தம்பதியினர். இவர்கள் பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் உள்ல தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவர்கள் தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால் வேலையின்றி தவித்த அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்து சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பயணசீட்டு கிடைக்கவில்லை.
இதனால் நடந்தே சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். அதன்படி கடந்த வாரம் லூதியானவில் இருந்து தனது 9 மாத கர்ப்பிணி மனைவியுடன் ஜதின் ராம் நடக்க ஆரம்பித்துள்ளார். சுமார் 100 கிலோமீட்டர் தூரம் நடந்து ஹரியாணாவின் அம்பாலா நகரை அடைந்துள்ளனர். அப்போது பிந்தியாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு துடித்துள்ளார். உடனே அருகில் இருந்த காவலர்களின் உதவியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. போதிய ஊட்டச்சத்து இல்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்ட கணவனும், மனைவியும் கதறியழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கர்ப்பமான காதலி!.. வாலிபர் எடுத்த விபரீத முடிவு!.. பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!
- சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்த... கர்ப்பிணிகளுக்கு பிரசவ வார்டாக மாறிய 'சிறப்பு ரயில்கள்'!.. எப்படி நடந்தது?
- ‘பிரவச வலியில் துடித்த கர்ப்பிணி’.. ஆம்புலன்ஸை சுற்றிய ‘சிங்கங்கள்’.. நெஞ்சை பதறவைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..!
- “கடந்த 35 வருஷத்துல இது ரொம்ப கம்மி!”.. 'அசராத' ஆராய்ச்சியாளர்கள்!.. 'அடுத்தடுத்து' கொடுக்கும் 'ஷாக்கிங்' ரிப்போர்ட்கள்!
- லாரி விபத்தில் பலியான ‘தாய்’.. கதறியழுத ‘கைக்குழந்தை’.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!
- கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம்!.. ஸ்தம்பித்த ரயில் நிலையம்!.. வதந்தியால் வந்த விபரீதம்!.. என்ன நடந்தது?
- 'புலம் பெயர் தொழிலாளியின் சடலம்...' '3 குழந்தைகளுடன்' சாலையோரம் 'நிர்க்கதியாக...' 'ட்ரக் ஓட்டுநரின்' மனசாட்சியற்ற 'செயல்...'
- "ஆமா..நாங்கதான் கொன்னோம்!".. 'பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!'.. சிக்கிய குழந்தையின் தந்தையும், பாட்டியும்!
- 'மர்மமான முறையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை'... 'சந்தேகத்தை கிளப்பிய அக்கம்பக்கத்தினர்'... 'விசாரணையை முடுக்கிய போலீசார்'... தொடரும் சோகங்கள்!
- 'தாய் பாசத்துல நம்மள மிஞ்சுனவனா இருப்பான் போலயே'... வைரலாகும் சுட்டி பையனின் கியூட் வீடியோ!