ஆசையா சாப்பிட போன ஆதரவற்ற சிறுவர்கள்.. வெளியே போங்கன்னு விரட்டிய ஹோட்டல் ஊழியர்.. நெஞ்சை ரணமாக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹோட்டலில் சாப்பிட சென்ற சிறுவர், சிறுமியரை வெளியே செல்லும்படி ஹோட்டல் ஊழியர் ஒருவர் விரட்டும் வீடியோ சமூக வலைத் தளங்களில் தற்போது அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

இந்த விடியோவில், ஒரு சிறுவன் மற்றும் இரண்டு சிறுமிகள் ஒரு துரித உணவகத்திற்குள் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் ஊழியர் ஒருவர் அவர்களை அங்கிருந்து வெளியே செல்லும்படி சொல்கிறார். இதனால் கவலையடைந்த அந்த சிறுவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடு அங்கிருந்து நகர்கிறார்கள். மேலும், உணவகத்தின் வாசல் கதவை திறந்து வெளியே செல்லும்படி அந்த ஊழியர் வற்புறுத்துகிறார். இதனால் மிகவும் சோகமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து வெளியே செல்கிறார்கள்.

இந்த வீடியோவினை ஹதீந்தர் சிங் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து காவேரி என்பவர் இந்த வீடியோவை ஷேர் செய்திருக்கிறார். ஹதீந்தர் எழுதிய பதிவில்," இது எந்த இடம் எனத் தெரியவில்லை. ஆனால், அந்த சிறுவர்களிடம் பணம் இருந்திருந்தால் அவர்கள் அங்கே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த சிறுவர்களை உணவக ஊழியர் வெளியே செல்லும்படி சொல்லும் காட்சி, பணத்தினை வைத்தே இங்கே மரியாதை தரப்படுவதை துல்லியமாக வெளிப்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வைரல் வீடியோ

இந்நிலையில், ஹதீந்தர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலை தளங்களில் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே உண்மையில் அந்த உணவகத்திற்குள் என்ன நடந்தது? எதற்காக சிறுவர்களை வெளியே செல்லும்படி ஹோட்டல் ஊழியர் நிர்பந்தித்தார்? என்பது குறித்து தெரியவில்லை. இதனை நெட்டிசன்கள் கேள்விகளாக எழுப்பி வருகின்றனர்.

இந்த பதிவில்,"விரக்தியுடன் அந்த சிறுமி புன்னகைப்பது நெஞ்சை பிளப்பது போல் இருக்கிறது" என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர்,"இதுதான் சமூகத்தின் உண்மையான முகம். நாம் எப்போதும் வசதியான இடத்தில் இருக்க விரும்புகிறோம்.ஆனால், நாம் மாறுவதே இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அம்னா என்பவர் இந்த பதிவில்,"இது ஒரு சமூக நிகழ்வு. வீட்டு உதவியாளர்கள் நடத்தப்படும் விதம் இப்படித்தான் இருக்கிறது. தங்களுடைய முதுகெலும்பு உடையும்வரை அவர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இறுதியில் மிஞ்சப்போவது இதுபோன்ற துயரங்கள் மட்டுமே" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

 

HOTEL, KID, LEAVE, உணவகம், சிறுவர்கள், வெளியேற்றம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்