'அடேங்கப்பா, ஃபோக்ஸ்வேகன் வாரி வழங்கும் ஆஃபர்'... 'தள்ளுபடி லிஸ்டில் இருக்கும் கார்கள்'... அதிரடி தள்ளுபடிக்கு காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்தியாவில் வாகனச் சந்தை என்பது மிகப்பெரிது. இதனால் இந்திய வாடிக்கையாளர்களைக் கவரப் பல நிறுவனங்கள் அவ்வப்போது பல தள்ளுபடிகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், அதன் வெண்டோ மற்றும் போலோ கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.78 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. மிட் சைஸ் செடனான வெண்டோ மற்றும் ஹேட்ச்பேக் மாடலான போலோ கார்களை வாங்குபவர்களுக்காகச் சிறப்பு மார்ச் மாத சலுகையை அறிவித்துள்ளது.

இந்த மாதத்திற்குள் வெண்டோ மற்றும் போலோ கார்களை வாங்குபவர்களுக்கு ரொக்கமாகவும், எக்ஸ்சேஞ்ச் மற்றும் லாயல்டி போனஸ் போன்ற சலுகைகளை வாரி வழங்குகிறது ஃபோக்ஸ்வ்வேகன் நிறுவனம். இந்தியாவில் விற்பனை மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.

வெண்டோ Highline Plus வேரியண்டின் ஆட்டோமேடிக் மாடலுக்கு சலுகை ரூ.69,000ல் இருந்தும், மேனுவல் மாடலின் சலுகை அதிரடியாக ரூ.1.38 லட்சம் என்ற அளவிலும் கிடைக்கிறது. மேலும் கூடுதலாக 40,000 ரூபாய்க்கான சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதன் மூலம் வெண்டோ மாடலுக்கு அதிகபட்சமாக 1.78 லட்ச ரூபாய் கிடைக்கிறது. 

வெண்டோ காரின் ஆரம்ப விலை 8.69 லட்சமாகும், வேரியண்டுக்கு தகுந்தபடி அதிகபட்சமாக 13.68 லட்சம் வரையில் கிடைக்கிறது. Trendline, Comfortline, Highline மற்றும் Highline Plus என 4 வேரியண்ட்களில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதேபோன்று போலோ கார்களின் MPI மற்றும் TSI மாடல்கள் இரண்டிலும் 50,000 ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கிறது.

Trendline வேரியண்டை பொறுத்தவரையில் 52,000 ரூபாய் வரை சலுகைகள் தரப்படுகிறது. Highline Plus MT வேரியண்டுக்கு 55,000 ரூபாயும், எக்ஸ்சேஞ்ச் சலுகையாகக் கூடுதலாக 30,000 ரூபாய் வரையும் சலுகை பெற முடியும். போலோ கார்கள் 6.01 லட்ச ரூபாய் தொடக்க விலையில் கிடைக்கிறது.

வேரியண்டுக்கு தகுந்தபடி 9.92 லட்சம் ரூபாய் வரையிலும் விலை உள்ளது. Trendline, Comfortline, Highline Plus மற்றும் GT version என 4 மாடல்களில் இக்கார் கிடைக்கிறது. மேற்கண்ட சலுகைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையிலானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்