'ரீசார்ஜ் ஃபார் குட்'... 'உதவியாக' செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜிற்கும் 'கேஷ்பேக்' ஆஃபர்... 'பிரபல' நிறுவனம் அறிவிப்பு...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வோடபோன் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வழங்கும் புதிய சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம்  Recharge for Good எனும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் வாடிக்கையாளர்கள்  ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யத் தெரியாதவர்கள், இணைய வசதி இல்லாதவர்கள், நண்பர் என யாருக்காக வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்யலாம். அப்படி செய்யப்படும் ரீசார்ஜ் தொகையில் 6 சதவீதம் வரை அந்த வாடிக்கையாளருக்கு கேஷ்பேக்காக வழங்கப்படும். இந்த சலுகை மைவோடபோன் செயலி அல்லது மைஐடியா செயலி மூலம் மேற்கொள்ளப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

இந்த கேஷ்பேக் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மைவோடபோன் அல்லது மைஐடியா செயலியில் லாக் இன் செய்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். பின்னர் ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகைக்கு ஏற்ப அந்த வாடிக்கையாளர் கணக்கில் கேஷ்பேக் தொகை கூப்பன் வடிவில் சேர்க்கப்படும். அதை அவர் மேற்கொள்ளும் அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் Recharge for Good எனும் இந்த திட்டம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்