'நாட்டையே உலுக்கிய விசாகப்பட்டினம் வாயுக்கசிவு...' 'தடய அறிவியல் துறை ஆய்வு முடிவுகள்...' 'வெளியான அதிர்ச்சி தகவல்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாநாட்டையே உலுக்கிய விசாகப்பட்டினம் வேதித் தொழிற்சாலை வாயுக்கசிவின் பின்னணியில் மனிதத் தவறு இருந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் தடய அறிவியல் துறை ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த 7ஆம் தேதியன்று அதிகாலை எல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது. இது காற்றில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பரவியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டது. சாலையில் நடந்து சென்றவர்கள் கொத்து, கொத்தாக மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய இந்த சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆந்திர மாநில தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டினர்.
அதில் ஸ்டைரின் வாயு கசிந்ததற்கு மனிதத் தவறு தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தடய அறிவியல் துறையினர், "ஸ்டைரின் உடன் டெர்டியரி புடைல் கேடேஹால்(TBC) என்ற வேதிப்பொருளை சேர்க்க வேண்டும். இது ஸ்டைரினை தானாக வேதிமாற்றத்திற்கு உட்பட விடாமல் தடுக்கும்.
ஆனால் ஊரடங்கு நாட்களில் TBC வேதிப்பொருளை சேர்க்காமல் விட்டுவிட்டனர். இதனால் வேதிவினை நிகழ்ந்து வாயு நிலைக்கு மாறி 150 டிகிரி வரை வெப்பம் உருவாகியுள்ளது. ஊரடங்கில் குளிர்விக்கும் நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.
இவற்றையெல்லாம் சரிபார்க்க ஆபரேட்டர் ஒருவர் கட்டுப்பாட்டு அறையில் இருந்திருக்க வேண்டும். நாங்கள் ஆய்வு செய்வதற்கு சென்றிருந்த போது அங்குள்ள சேமிப்பு டேங்கின் வெப்பநிலை 120 முதல் 150 டிகிரி வரை இருந்தது. ஸ்டைரினின் கொதிநிலை 146 டிகிரி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு அலட்சியமாக தொழிற்சாலை செயல்பட்டிருக்கக் கூடாது" எனக் குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரசாயன ஆலையில் மீண்டும் வாயு கசிவு...' 'நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட மக்கள்...' '50க்கும் மேற்பட்ட வீரர்கள் போராட்டம்...'
- 'குழந்தைகளை தூக்கிக் கொண்டு...' 'மூச்சுத் திணறலோடு ஓடினேன்...' 'நினைவிழந்த போது செத்துவிட்டதாகவே நினைத்தேன்...' உயிர்பிழைத்தவரின் அதிர்ச்சிகரமான நிமிடங்கள்...!
- '50 நிமிடத்தில்' கொரோனாவை கண்டறியும் 'கருவி...' ஒரு 'கருவி' மூலம் ஒரு நாளுக்கு '20 முடிவுகள்...' 'ஆயிரம் கருவிகள் தயார்...' 'தனியார் நிறுவனம் சாதனை...'
- 'கொரோனா மருந்து எனக் கூறி...' 'ஊமத்தை பூ மருந்து குடித்த...' '8 பேர் கவலைக்கிடம்...' "எதைக் குடுத்தாலும் குடிச்சிருவிங்களா..." 'வெறுத்துப் போன போலீசார்...'
- 'தந்தையின்' 'இறுதிச்சடங்கில்' பங்கேற்க முடியாத நிலை.... 'விமானங்கள்' ரத்தானதால் 'அமெரிக்காவில்' தவித்த மகன்... 'இறுதிச்சடங்கை' வீடியோவில் பார்த்து 'கதறி அழுத'.... 'நெஞ்சை' உருக்கும் 'சோகம்'...
- 'ரயிலில்' போலீசாரை பார்த்ததும் 'பதுங்கிய' இருவர்... 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்கள் என 'தெரிந்ததும்'... 'பதறிப்' போன 'பயணிகள்'...
- 'கொரோனாவுக்கு' வெறும் 'பாராசிட்டமால்' போதும்... சர்ச்சையில் சிக்கிய 'பிரபலம்'... 'சந்திரபாபு நாயுடுவே' கலாய்த்த அந்த நபர் 'யார் 'தெரியுமா?...
- "சும்மா குடுத்தாலும் வேணாம்..." "ஆள விடு சாமி..." இது என்னடா 'கோழிக்கறிக்கு' வந்த சோதனை... 'கோழிப்பண்ணை' உரிமையாளர்கள் 'வாழ்வில்'... 'கொரோனா' நிகழ்த்தும் 'கோரத்தாண்டவம்'...
- ஓடிப்போன 'டாடியை' கண்டுபிடிக்க... மகன் செய்த 'சூப்பர்' காரியம்... பலரையும் 'வியப்பில்' ஆழ்த்திய 'நெகிழ்ச்சி' சம்பவம்...
- 'லேடிஸ் ஹாஸ்டலுக்குள்'... 'கட்டிலுக்கு அடியில்'... 'ஒரு நாள்' முழுவதும் பதுங்கியிருந்த 'மாணவன்'... 'கையும் களவுமாக' பிடித்த 'காவலர்கள்'...