'இனிமேல் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை'... வெளியான முழு பட்டியல் இதோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 16 நாடுகளின் பட்டியலை மாநிலங்களவையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த வாரம் திங்கள் அன்று தொடங்கியது. இதில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள். அந்த வகையில் வெளிநாடுகளில் இந்தியர்களுக்கான விசா குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
அதில் பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு 43 நாடுகளில் வருகையின் போது உடனடி விசா வழங்கப்படுகிறது. இதில் ஈரான், இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். 36 நாடுகளில் இ-விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் இலங்கை, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும். இந்நிலையில் 16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அரசு தெரிவித்துள்ளது.
அதில், ''பார்படாஸ், பூட்டான், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங் எஸ்.ஏ.ஆர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், நேபாளம், நியு தீவு, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல், செர்பியா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ'' உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியர்களுக்கான சர்வதேச பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் விசா இல்லாத பயணம், விசா-வருகை மற்றும் இ-விசா வசதிகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் முரளிதரன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘H1B விசா வழக்கு’.. இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு..!
- '55 வயதான வெளிநாட்டவர்களுக்கு'.. 'விசா' விஷயத்தில் 'அதிரடி' சலுகை அறிவித்துள்ள நாடு!
- 'ப்ளீஸ்... இவங்கள மட்டும் விட்ருங்க!.. இல்லனா பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்!'.. அதிபர் டிரம்ப்புக்கு வந்த அவசர கடிதம்!
- H-1B விசா விவகாரம்: 'இந்தியர்கள்' எடுத்த அதிரடி முடிவால் 'அரண்டு போயிருக்கும்' டிரம்ப் அரசு - அமெரிக்காவில் 'புதிய' திருப்பம்!
- இந்தியர்கள் மேல் 'இடியாக' இறங்கிய... டிரம்ப்பின் 'அடுத்த' அதிரடி அறிவிப்பு! - கலங்கி நிற்கும் இந்திய மாணவர்கள்!
- 'H-1B விசா' தடையில் திடீர் திருப்பம் - 'வெளிநாட்டு' திறமையாளர்களை வளைத்துப்போட டிரம்ப் 'புது பிளான்'!
- அத 'மனசுல' வச்சுக்கிட்டு தான்... ஹெச்-1 பி விசாவை 'தடை' பண்ணிருக்காரு... 'வரிந்து' கட்டும் எதிர்க்கட்சிகள்!
- "நாங்க இல்லனா உலகப் பொருளாதாரமே இல்ல!".. கொந்தளித்த ஐடி ஊழியர்கள்!.. ட்ரம்ப் அரசிற்கு சரமாரி கேள்வி!.. பூதாகரமான H-1B விசா விவகாரம்!
- பரபரக்கும் ‘H-1B’ விசா விவகாரம்.. கூகுள் CEO சுந்தர்பிச்சை ‘அதிரடி’ ட்வீட்..!
- 'சீன' மாணவர்களுக்கு 'அடுத்த செக்...' "உளவு பார்த்தது போதும் கிளம்புங்க..." 'விசாவை' ரத்து செய்யும் 'அமெரிக்கா...'