'ஓமிக்ரான்' வைரஸ ஃபேஸ் பண்றதுக்கு 'அது' மட்டும் தான் 'ஒரே வழி', இல்லன்னா...' - ஃபேமஸ் வைராலஜிஸ்ட் 'முக்கிய' தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் அச்சமே இன்னும் முடியாத நிலையில் ஓமிக்ரான் வைரஸ் குறித்து இந்தியா பதற்றத்தில் உள்ளது.

Advertising
>
Advertising

தென்னாப்பிரிக்காவில் அறியப்பட்ட கோவிட்-19 இன் புதிய உருமாற்ற வைரசாக ஓமிக்ரான் வைரஸ் கருதப்படுகிறது. இதில் அதிக அளவு ஸ்பைக் பிறழ்வுகளைக் கொண்டிருப்பதாகவும் ஓமிக்ரானால் தென்னாப்பிரிக்காவில் 300% அளவுக்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தென்னாப்பிரிக்காவில் பரவ தொடங்கிய ஒரு வாரத்துக்குள் போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது

தற்போது இந்தியாவில் பரவலாக பரவி வரும் ஓமிக்ரான் பாதிப்புகள் குறித்து புகழ்பெற்ற வைராலஜிஸ்ட் மற்றும் வைராலஜியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனருமான மருத்துவர் டி.ஜேக்கப் ஜான் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ்கள் செலுத்திக்கொண்டால் ஒமைக்ரான் வைரஸ் நாம் பயப்படும் அளவு மோசமான பாதிப்புகளை தராது' எனக் குறிப்பிடுள்ளார்.

மேலும் மருத்துவர் டி.ஜேக்கப் ஜான் கூறும் போது, 'ஓமிக்ரானில், 34 பிறழ்வுகள் காணப்படுவதில் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா மற்றும் கவலைக்குரிய அனைத்து வகைகளையும் விட அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், கோவிட்-19-க்கான பூஸ்டர் தடுப்பூசிகள் ஓமிக்ரானுக்கு எதிராக வேலை செய்யும் என்பதால் அந்த எளிதான தடையை நாம் உருவாக்கிவிட்டால் ஓமிக்ரான் மூன்றாவது அலையை நாம் நினைக்கும் அளவிற்கு கடினமானதாக இருக்காது.

நம் நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் பரவி உருமாற்றம் ஏற்பட்டால் அதன் பிறகு என்ன நடக்கும் என்பது யூகிக்க முடியாது. ஆனால் நாம் இப்போது பயப்படுவது போல் நிச்சயம் இது மோசமாக இருக்காது.

இப்போதிருக்கும் நிலைக்கு ஓமிக்ரான் மூன்றாவது அலையை விதைக்காமல் இருக்கலாம். ஆனால் அதை பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் நாம் எடுக்கவேண்டும்.

இதில் நாம் நினைவில் வைத்துக்கொள்ள இரு விஷயம் உள்ளது. 'தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுங்கள்' மற்றும் 'இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்களை வழங்குங்கள்' என்பதுதான்.

ஓமிக்ரானை பூஸ்டர் டோஸ்களை செலுத்தி புதிய உருமாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நாம் செய்யவேண்டும் என்பதையும் மறக்க கூடாது. தடுப்பூசிகளே ஓமிக்ரானுக்கு எதிரான எளிதான தடையாகும்' எனக் கூறியுள்ளார்.

VIROLOGIST, JACOB JOHN, OMICRON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்