எப்போ தாங்க இந்த 'ரெண்டாவது அலை' குறையும்...? 'கொரோனா பரவல் குறைவது குறித்து...' - பிரபல வைராலஜிஸ்ட் பதில்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரபல வைராலஜிஸ்ட் மருத்துவர் கொரோனாவின் இரண்டாம் அலை எப்போது குறையும் என்பதை பற்றி பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் முன்பை விட மூன்று மடங்காக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வைரலாஜிஸ்ட் மருத்துவர் ககனதீப் காங், இந்திய மகளிர் பத்திரிகையாளர்கள் குழுவுடன் காணொலியில் இதுகுறித்து பேசியுள்ளார். இவர் தற்போது பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகளின் கொரோனா தொற்று தடுப்புக் குழுவின் ஆலோசகராக செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அவர் கூறியுள்ளாதாவது, 'இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் சென்ற ஆண்டை விட இப்போது அதிகரித்து வருகிறது. எந்த ஒரு நோய் தொற்று பரவினாலும் அதன் இரண்டாம் அலையின் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும். அதேபோல் தான் இப்போதும் உள்ளது.

இதில் குறிப்பு கூறவேண்டும் என்றால் இந்த பரவலின் வீதம், ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்துதான் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் என்று கணித்துள்ளன.

அதோடு மேலும்  சில காரணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் கணித்த வகையில் மே மாதம் நடுப்பகுதி அல்லது இறுதியிலிருந்து பாதிப்பு படிப்படியாக சரியத் தொடங்க வாய்ப்புள்ளது.

தபோது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுமே கொரோனா தொற்றுக்கு எதிராகச் சிறப்பாக செயல்பட்டு, நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன.

நோய் தொற்று ஏற்படுவதிலிருந்து பெரும்பாலும் காக்கின்றன. நீங்கள் வைரஸில் பாதிக்கப்படுவதிலிருந்து உங்களை காத்துக்கொண்டாலே, மற்றவர்களுக்கு உங்களால் நோயை பரப்பமுடியாது.

கொரோனாவின் முதல் அலையிலிருந்து தப்பிய நடுத்தரவகுப்பினர், கிராமப்புறத்து மக்கள் இந்த 2-வது அலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் ஏறக்குறைய 4 லட்சம்பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்போதுள்ள சூழலில் கொரோனா வரைஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுன் சிறப்பாக உதவும்.

ஆனால் நாம் தீவிரமான லாக்டவுனை அமல்படுத்தும்போது, சென்ற வருட லாக்டவுனை போல, மக்கள் தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நாம் லாக்டவுனை அறிவிக்கும் போது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை வராது, மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், பாதுகாப்பான தங்குமிடம் இருக்கும், மனிதஉரிமை மீறல்கள் இருக்காது, அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்று உறுதியளித்தால் நிச்சயம் தீவிரமான லாக்டவுனை அமல்படுத்தலாம்' என பிரபல வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்