VIRAT KOHLI : மகாகாளேஸ்வரர் கோவிலில் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி தரிசனம்.. வைரல் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்து வருபவர் விராட் கோலி. உலக அளவில், கிரிக்கெட் அரங்கில் ஏராளமான சாதனைகளையும் படைத்துள்ள விராட் கோலி, கடந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கு முன்பு வரை ஒரு சில ஆண்டுகள் பெரிய அளவில் ரன் குவிக்காமல் இருந்து வந்தார்.

                           Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இதன் காரணமாக கோலியை சுற்றி ஏராளமான விமர்சனங்களும் உருவாகி இருந்தது. பலரும் பல விதமான காரணங்களையும் கோலியின் ஃபார்ம் அவுட்டிற்கு தெரிவித்து வந்தனர்.

விமர்சனங்கள் தவிடு பொடி

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரிலும், அதன்பின் நடைபெற்ற டி20 உலக கோப்பை உள்ளிட்ட தொடர்களிலும் அடுத்தடுத்து ரன்களை குவித்து தானொரு ரன் மிஷின் தான் என்பதையும் நிரூபித்து, தன் மீது விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.

இதனையடுத்து தொடர்ந்து சிறந்த ஃபார்மில் இருந்து வரும் விராட் கோலி, தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் இடம் பிடித்துள்ளார். இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. ஆனால் இந்த மூன்று போட்டிகளிலும் அதிக அளவில் கோலி ரன் குவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners

ஆனால், அதே வேளையில் அடுத்த போட்டியில் நிச்சயம் பழைய ஃபார்முக்கு திரும்பி கோலி ரன் குவிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாக பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார் விராட் கோலி. மேலும் இந்த தம்பதிகளுக்கு வாமிகா என்ற ஒரு மகளும் உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners

கோவிலில் சாமி தரிசனம்

இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் உள்ள மகாகாளேஸ்வரர் ஜோதிர்லிங்கா கோயிலுக்கு விராட் கோலி சென்றுள்ளார். மற்ற பக்தர்களுடன் கோவிலில் இவர்கள் அமர்ந்து சாமியை தரிசனம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் சூழலில், நாங்கள் இங்கே பிரார்த்தனை செய்ய வந்ததாகவும் மகாகாளேஸ்வரர் கோயிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்றும் அனுஷ்கா ஷம்மா தெரிவித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோருடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் கோலி சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் ஒன்பதாம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்