என் ஒன்றரை 'வயசு' மவனோட மொகத்த... கடைசியா ஒரு 'தடவ' பாக்க முடிலயே... உறையவைத்த புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து முடக்கப்பட்டதன் காரணமாக வேறு மாநிலங்களில் தொழில் செய்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்து செல்ல ஆரம்பித்தனர். இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அரசு தரப்பில் சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்த போதும் அது போதுமானதாக இல்லை என பல்வேறு கருத்துகள் நிலவி வந்த நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாகவும், சைக்கிள் மூலமும் தொழிலாளர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளி ஒருவர் செல்போனில் பேசியபடி அழுதுகொண்டு இருக்கும் புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிடிஐ செய்தி நிறுவனத்தின் புகைப்படக்கலைஞர் அதுல்யாதவ் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் இருப்பவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் புகார் பண்டிட் ஆவார். இவருக்கு 3 பெண் குழந்தைகளும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். டெல்லியில் கட்டிட வேலை செய்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் அவரது மனைவி அழைத்து உடல்நலக்குறைவின் காரணமாக ஒன்றரை வயது மகன் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தனது மகனை கடைசியாக ஒரு தடவை காண நினைத்து போதிய ரெயில் வசதி இல்லாத நிலையில் டெல்லியிலிருந்து சொந்த ஊரான பீகாருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தார். டெல்லி - உத்திரப்பிரதேச மாநிலம் எல்லையான காசியாபாத் பகுதியை வந்தடைந்தார். ஆனால் அவரை உத்தரப்பிரதேச மாநிலத்திற்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். எல்லைப்பகுதியில் இரண்டு முதல் மூன்று நாட்களை கழித்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த டெல்லி போலீசார், ராமைக் கண்டுபிடித்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பீகார் செல்லும் சிறப்பு ரெயிலில் அவரை கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைத்தனர். இறுதியில் சொந்த ஊர் அடைந்த ராமிற்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தந்தை வர தாமதமானதால் மகனின் உடலை அடக்கம் செய்து விட்டதாக அவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனைக் காண பல இன்னல்களை தாண்டி வந்த தந்தையால் மகனை காண முடியாமல் போன கொடிய நிகழ்வு அரேங்கேறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'யாரும் பக்கத்துல போகாதீங்க...' 'கொரோனா வந்திடும்...' 'சாலையில் கிடந்த பணம்...' கொரோனாவால ஆட்டோக்காரருக்கு லக்...!
- 'கையில காசு இல்ல, சாப்பிட வழி இல்ல'...'ஊருக்கு நடந்தே போறோம் சார்'...'மூட்டை முடிச்சுகளுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்'... சென்னையில் பரபரப்பு!
- 'எப்படி என் காரை நிறுத்தலாம் நீ...' 'காவலரை 50 முறை தோப்புக்கரணம் போட வைத்த வேளாண் அதிகாரி...' 'கொதித்துப் போன டிஜிபி...' 'சர்ச்சை வீடியோ...'
- 'இது நம்ம லிஸ்ட்-லயே இல்லையே!'.. நூதன முறையில் செமஸ்டர் நடத்த 'ப்ளான்!'... 'வாட்ஸ் அப்' மூலம் மாணவர்களை அலறவிட்ட பல்கலைக்கழகம்!
- ‘மனைவி, குழந்தையை பாக்கணும்போல இருக்கு’.. சென்னையில் விபரீத முடிவெடுத்த வாலிபர்..!
- 'ஒருவரால் வந்த வினை!'... 'ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா!'... மாவட்டத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
- ‘ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்த மருத்துவமனை?’.. அழுதுகொண்டே குழந்தையை தூக்கி வந்த தாய்.. ஊரடங்கில் நடந்த சோகம்..!
- 'இது தான் 'கொரோனா குடை'யாம்!... அப்படி இதுல என்ன தான் இருக்கு!?'... பீகார் இளைஞரின் புது ஐடியா!
- 'சொல்ற காசு குடுத்தா சொந்த ஊர் போலாம்' ... 'சட்டவிரோதமாக லாரிகளில் பயணம்' ... ஒரு நபருக்கு வசூலித்த தொகை இத்தனை ஆயிரமா?
- 'கொரோனா' அச்சத்தில்... 'ஊர்' திரும்பியவர்கள் பற்றி 'தகவல்' கொடுத்ததால்... 'இளைஞருக்கு' நேர்ந்த 'விபரீதம்'... 'பதறவைக்கும்' சம்பவம்...