இந்தியாவில் கொரோனா 2-வது அலையால் ‘இங்கதான்’ பாதிப்பு அதிகம்.. என்ஜிஓ ஆய்வில் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற தன்னார்வ அமைப்பு (NGO) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 2 கோடியே 87 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சத்துக்கு 44 ஆயிரம் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் கிராமங்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட மே மாதத்துக்கான தரவுகளில், கொரோனா தொற்றில் 53 சதவீதமும், உயிரிழப்பில் 52 சதவீதமும் கிராமங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி கிராமங்களில் கூடுதலாக 76 சதவிகித அளவுக்கு மருத்துவர்கள் மற்றும் 35 சதவிகித அளவுக்கு ஆய்வக தொழில்நுட்ப ஊழியர்களின் தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மே மாதம் புதிய தொற்றுகளும், உயிரிழப்புகளும் அதிகம் பதிவானது கிராமங்களில்தான் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதனிடையே கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி கொரோனா இல்லாத கிராமத்திற்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மக்கள் கோரிக்கை - சுற்றுச் சூழல் தினம்: கனிமொழியின் இரட்டை செயல் திட்டம்!
- சூழலியல் சிக்கலில் வண்டலூர் பூங்கா!.. வன உயிரினங்களையும் விட்டுவைக்காத கொரோனா!.. விளைவு என்ன?
- 'கொரோனா 3வது அலை... குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்'!.. 'அதுக்காக தான் 'இந்த' முடிவு எடுத்திருக்கோம்!.. எய்ம்ஸ் இயக்குநர் திட்டவட்டம்!
- 'இந்த நேரத்துல பெத்த பொண்ணு கூட இத செய்வாங்களான்னு தெரியல'... 'மாமா கெட்டியா பிடிச்சுக்கோங்க'... மொத்த பேரையும் நெகிழ வைத்த மருமகள்!
- ‘இப்போதான் எல்லாரும் அதைப்பத்தி பேசுறீங்க’!.. ‘ஆனா நான் அப்பவே சொன்னேன், வைரஸ் எங்கிருந்து பரவுச்சுன்னு’.. மீண்டும் பரபரப்பை கிளப்பும் டிரம்ப்..!
- தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி... உச்சகட்ட எதிர்பார்ப்பு!.. பாரத் பயோடெக் நிறுவனத்துடன்... முதல்வர் ஸ்டாலின் அவசர மீட்டிங்!
- என்கிட்டயே சோசியல் டிஸ்டன்ஸா...? 'மாமியார் போட்ட மாஸ்டர் பிளான்...' - சதிவலையில் சிக்கிய மருமகள்...!
- ஃப்ரீயா 'பீர்' தருவோம்...! 'அதுக்கு நீங்க பண்ண வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான்...' - இன்னும் 'பல சலுகைகளை' அறிவித்துள்ள அமெரிக்கா...!
- 'நீங்க தனியாள் இல்ல...' 'உங்க பின்னாடி நாங்க இருக்கோம்...' 'நம்ம ஊழியர்கள்ல யாராவது கொரோனா வந்து இறந்துட்டாங்கனா...' - நெகிழ வைக்கும் பல 'சலுகைகளை' அறிவித்த 'பிரபல' நிறுவனம்...!
- 'கொரோனா வார்டுல நைட் டூட்டி முடிச்சிட்டு...' 'காலையில வீட்டுக்கு கிளம்ப...' - 'கார்' எடுக்க வந்த 'டாக்டருக்கு' காத்திருந்த அதிர்ச்சி...!