“அரிசி சாதத்தால்”.. கிராமப்புறத்தில் அதிகரிக்கும் சர்க்கரை நோய்?.. அதிர்ச்சி ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா முழுவதும் நீரிழிவு நோயால் கிராமப்புறங்களில் கூட உள்ள இளைஞர்கள் உட்பட எண்ணிலடங்காதோர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதோடு, நோய்த்தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சர்க்கரை வியாதி என்கிற நீரிழிவு நோய் ஒரு காலத்தில் வயதான வசதியானவர்களுக்கும், நகர்ப்புற மூளை உழைப்பாளிகளுக்கும் மட்டுமே வந்துகொண்டிருந்தது. கிராமப்புறத்தில் உடல் வியர்க்க உழைப்பவர்களுக்கு சர்க்கரை வியாதியே வராமல் இருந்தது. இந்த நிலையில், கிராமப்புறத்தில் கூட, அதுவும் 50 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கே வரத் தொடங்கியுள்ளது.

இதற்குக் காரணம் 14 ஆண்டுகளுக்கு முன் 4.9 சதவீதம் இருந்த நீரிழிவு நோய் தற்போது 13.5 சதவீதமாக அதிகரித்து 18.2 சதவீதமாக மாறியுள்ளதற்கு அரிசி சாதத்தை அதிகம் சாப்பிடுவதே என்பதே காரணம் என சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டண்டீ பல்கலைக் கழகம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

DIABETES, RICE, VILLAGE, RESEARCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்