"இது அடிபொழி ஐடியா சாரே"... 'சமூக இடைவெளி'யை கடைபிடிக்க... 'கேரள' கிராம மக்களின் அசத்தல் 'ப்ளான்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இந்தியாவில் முதன்முதலாக கேரளா மாநிலத்தில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிப்பு ஆரம்பமான போது கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரசை கட்டிற்குள் கொண்டு வர பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை கேரளா அரசு மேற்கொண்டது. அதற்கு கேரள மாநில மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அது மட்டுமில்லாது அதிகம் பேர் குணமடைந்து வீடு திரும்பிய மாநிலமாகவும் கேரளா அறியப்பட்டது.
கொரோனா வைரஸின் தீவிரம் கேரளாவில் குறைந்த போதும் பொது மக்கள் பொது இடங்களில் வரும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் அற்புதமான ஐடியா ஒன்றை கூறியுள்ளனர்.
அப்பகுதி கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் போது கட்டாயம் குடையை கொண்டு செல்ல வேண்டும். குடை விரித்து மக்கள் நடந்து செல்லும் போது இரண்டு குடிகளுக்கு இடைப்பட்ட இடைவெளி நிச்சயம் ஒரு மீட்டருக்கு மிகாமல் இருக்கும். இதனால் மக்கள் தாங்களாக சமூக இடைவெளியை கடைபிடிக்க பழகிக் கொள்வர்.
கொரோனாவை கட்டுபப்டுத்த மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் கேரளாவின் இந்த யோசனையையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தொடர்ந்து 20 முறையும் பாசிட்டிவ்'... '21 முறை நெகட்டிவ்'... 'நாட்டையே ஆச்சரியப்படுத்திய கேரளா'... சாதித்தது எப்படி?
- கொரோனா தொற்றால் பலியான ‘4 மாத குழந்தையின்’ இறுதிச்சடங்கு.. நெஞ்சை ‘ரணமாக்கிய’ போட்டோ..!
- கொரோனாவுக்கு 'எதிரான' போராட்டத்தில்... 'முன்னிலையில்' உள்ள 'தென்' மாநிலங்கள்... 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை...
- ‘எப்படி வந்ததுனே தெரியலை’... 'நான்கு மாத பச்சிளம்’... ‘பெண் குழந்தைக்கு நிகழ்ந்த துக்கம்’!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'ஊரடங்கிலும் உடல்தானம்...' 'வாழ்ந்தப்போ தேடித்தேடி உதவி செய்வார்...' 'மார்க்கம் அனுமதிக்கல, ஆனாலும்...' நெகிழ வைத்த முஸ்லீம் குடும்பம்...!
- 'காருக்குள் இருந்தபடியே சோதனை...' 'கேரள அரசின் புதிய கண்டுபிடிப்பு...' 'கொரோனா' பணியில் 'புரட்சி' செய்யும் 'திரங்கா வாகனம்...'
- 'அறிகுறிகள்' எதுவுமின்றி '19வது முறையும்' பெண்ணுக்கு பாசிட்டிவ்... '42 நாட்கள்' சிகிச்சைக்குப் பின்... 'கவலையில்' மருத்துவ குழு...
- நல்ல 'உணவு' குடுக்குற அளவுக்கு 'வருமானம்' இல்ல... என்னால 'முடிஞ்சது' இதுதான்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!