ஒரு கிராமத்தில் 1500 திருடர்கள்! கொள்ளை அடிப்பது எப்படின்னு ஸ்பெஷல் கிளாஸ் வேற நடக்குது.. அதிர்ச்சி தகவல்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார்: ஒரு கிராமமே திருட்டு தொழிலுக்கு பயிற்சி கொடுத்தும், போலீசாரிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்றும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

பீகார் மாநிலம் ககிகார் மாவட்டம் கோதா பகுதியில் ஜீரப்கஞ்ச் என்ற கிராமம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே தொழில் என்னவென்றால் திருட்டு தான்.

ஆடம்பரமான வாழ்க்கை:

கொள்ளை அடிப்பது மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பெரிய கோடீஸ்வரர் வீடுகளில் இருப்பது போன்ற விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பிரமாண்ட அறைகள் என ஆச்சரியப்படும் அளவுக்கு அக்கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கொள்ளை கிராமத்திற்கு ஒரு தலைவரும் உள்ளார். இந்த கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள், சிறுவர்களை பள்ளிக்கு சென்று படிக்க வைப்பது இல்லை. அதற்கு பதிலாக திருட்டு தொழில் எப்படி செய்யவேண்டும் என கற்று கொடுக்கிறார்கள். திருட்டில் ஈடுபடுவது எப்படி? அதில் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது எப்படி? அப்படியே மாட்டிக்கொண்டால் போலீசாரிடம் உண்மையை கூறாமல் சமாளிப்பது எப்படி? என்பது குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறதாம்.

குதுகலமாக இருக்கும் கிராமம்:

இதனால் பள்ளிக்கூடம் போக வேண்டிய சிறு பிள்ளைகள் எல்லாம் பெரியவர்கள் கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி சின்ன சின்ன திருட்டை செய்து பெரியவர்கள் ஆனதும் வங்கிகள், பெரிய நிறுவனங்கள், நகை கடைகளில் புகுந்து பெரிய அளவிலான கொள்ளையில் ஈடுபடுவார்களாம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கிராமமே குதூகலிக்கும். கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கிராமத்தினர் தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் அந்த தலைவருக்கும் ஒரு பங்கினை கொடுப்பார்களாம்.

அதுமட்டுமல்லாது கிராமத்தினர் தொழிலுக்கு புறப்படுவதற்கு முன் தங்களது குல தெய்வத்திற்கு பூஜை செய்து விட்டு தான் தொழிலுக்கு புறப்பட்டு செல்கின்றனர். பூஜை செய்யும் போது சமிக்ஞை கிடைத்தால் தான் அவர்கள் திருட்டுக்கு செல்வார்கள். இல்லையென்றால் தங்கள் திட்டத்தை கைவிட்டு விட்டு வேறு ஒருநாளில் செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

பெண்கள் கையில் அதிக பணம் நகை:

இந்த கிராமத்தில் அதிக சுகத்தை அனுபவிப்பது அக்கிராமத்தில் இருக்கும் பெண்கள் தானாம். தங்கள் கணவர்மார்கள் கொள்ளை அடித்து வரும் நகைகளை கை மற்றும் கழுத்து நிறைய அணிந்து கொண்டு வெளியே சந்தோ‌ஷத்துடன் சுற்றி திரிகின்றனர். மேலும் கைநிறைய கட்டு, கட்டாக பணத்துடன் ஷாப்பிங் செய்வது. ஓட்டலுக்கு குழந்தை குட்டிகளுடன் வயிறு முட்ட விதவிதமாக உணவு பண்டங்களை சாப்பிடுவது, தியேட்டர்களுக்கு சென்று சினிமா பார்ப்பது என தினமும் பொழுது போக்கி வருகின்றனர்.

இந்த ஜீரப்கஞ்ச் கிராம மக்களின் செயல் பக்கத்து கிராம மக்களே பொறாமைப்படும் அளவிற்கு இருக்குமாம். ஆனால் இப்போது அதுவே அவர்களுக்கு ஆப்பு வைக்கும் அளவிற்கு சென்றுள்ளது.  மேலும், போலீசார் அந்த கிராமத்தில் யாரெல்லாம் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்ற பட்டியலை தயாரித்து வருகிறார்களாம்.

VILLAGE, THIEVES, BIHAR, பீகார், திருடர்கள், கிராமம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்