'அட, மேடம் நீங்களா?'... 'மாஸ்க் போட்டதால அடையாளமே தெரியல'... 'வீடியோவை பார்த்து வியந்த மக்கள்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது அதிரடியால் ஆளும் கட்சி, எதிர் கட்சி என அரசியல்வாதிகளைக் கலங்கடித்த ரோகிணி ஐஏஎஸ், பஞ்சரான தனது காரின் டயரை தானே கழற்றி மாட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மைசூரு மாவட்ட கலெக்டராக இருப்பவர் ரோகிணி சிந்தூரி. இவர் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என பாகுபாடு பார்க்காமல் யார் தவறு செய்தாலும் அசராமல் தட்டி கேட்பார். இவரது அதிரடியால் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற ரோகிணி சிந்தூரி, சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சொந்த காரில் வெளியே சென்றுள்ளார்.
அப்போது அவரது காரின் டயர் பஞ்சராகி உள்ளது. இதனால் கலெக்டர் ரோகிணி சிந்தூரியே தனது காரில் இருந்த ஜாக்கி உதவியுடன் பஞ்சரான டயரை கழற்றி, மாற்று டயரை மாட்டியுள்ளார். அந்த நேரத்தில் அங்கு எதேச்சையாக வந்த ஒருவர் பெண் ஒருவர் தானே கார் டயரை கழற்றி மாட்டியதை பார்த்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அருகில் சென்று விசாரித்தார்.
முகக்கவசத்தை அகற்றிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி அவரிடம் பேசியுள்ளார். அப்போது தான் கார் டயரை கழற்றி மாட்டியவர் கலெக்டர் ரோகிணி சிந்தூரி என்பது அந்த நபருக்குத் தெரியவந்தது. உடனே அவர் கலெக்டர் தானே நீங்கள் என கேட்டார். அதற்கு கலெக்டர் புன்னகையை உதிர்த்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
தற்போது இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரோகிணி சிந்தூரி தனது அதிரடிக்கு மட்டுமல்லாது மக்களிடம் தனது எளிமையான அணுகுமுறையாலும் அதிகம் பெயர் பெற்றவர். இதனால் அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்