VIDEO: சாப்பிட 'என்ன' இருக்கு...? 'எனக்கும் பசிக்கும்ல...' - ஜன்னல் வழியா 'கிச்சன்'ல புகுந்து செய்த சேட்டை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை சரசரவென சமையலறையில் தும்பிக்கை விட்டு உணவு சாப்பிடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

தமிழகத்தின் நீலகிரி மாவட்ட பகுதியின் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைத்துள்ளது பந்திப்பூர் புலிகள் காப்பகம். கர்நாடகாவில் 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா 874 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.

மைசூரிலிருந்து 80 கிலோமீட்டர்கள் தொலைவிலும், தக்காண பீடபூமியும் மேற்குத் தொடர்ச்சி மலை இணையும் இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 680 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த காப்பகம் அமைந்துள்ள வனப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது காணப்படுவது வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தைப் புலி ஹோட்டலுக்குள் சென்று திரும்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போதோ ஹோட்டலுக்குள் நுழைந்த யானை சும்மா போகாமல் ஹோட்டலையே ஒரு புரட்டு புரட்டி போட்டு சென்றுள்ளது. காட்டில் இருந்து வந்த யானை செம பசியில் இருக்கும் போல.

ஓட்டலுக்கு வந்த யானை நேரடியாக விடுதியின் சமையலறைக்குச் சென்று ஜன்னலை தனது தும்பிக்கையால் பெயர்த்து எடுத்து உள்ளே இருந்த உணவை சாப்பிட்டுள்ளது.

என்னடா இது மனிதர்கள் தான் சோத்துக்கு செத்தவர்கள் என பார்த்தால் இந்த யானை அதுக்கு மேல் பாத்திரங்களைத் தள்ளிவிடும் அங்கிருந்த சாப்பாட்டை தும்பிக்கையால் எடுத்து சாப்பிடுள்ளது.

சமையலறையில் கேட்ட சத்தம் கேட்டு ஓடிவந்த ஊழியர்கள், காட்டுயானையின் செயலைக் கண்டு அதிர்ந்துள்ளனர். அதோடு, யானை செய்த காரியங்களை தங்கள் மொபைல் ஃபோனில் பிடித்து அதனை சமூகவலைதளத்தில் வெளியிட, அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

 

VIDEO, ELEPHANT, FOOD, KITCHEN, யானை, சமையலறை, தும்பிக்கை, உணவு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்