தங்க செயினை திருடும் எறும்புகள்.. "இவங்க மேல எப்படி கேஸ் போடுறது?".. IFS அதிகாரி பகிர்ந்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎறும்புகள் கூட்டமாக தங்க செயினை திருடிச் செல்லும் பழைய வீடியோ ஒன்றினை IFS அதிகாரி ஒருவர் மீண்டும் தற்போது பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | முகத்தில் கருப்பு ஸ்டிக்கருடன் விளையாடிய செரீனா வில்லியம்ஸ்.. காரணம் இதுதானா?..!
இணைய வசதி பல்வேறு வழிகளில் மனித குலத்திற்கு பயன்பட்டு வருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. பல்வேறு வகைகளில் மனிதர்களுக்கு உதவும் இணையம் தகவல் பரிமாற்றங்களில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக நொடி பொழுதில் உலக நடப்புகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அவற்றுள், ஆச்சர்யம் தரும் வகையிலான செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எப்போதும் இணைய தளங்களில் பஞ்சமே இருப்பதில்லை. சொல்லப்போனால் இதுபோன்ற வீடியோக்களை மக்கள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்ற ஆண்டு எறும்புகள் தங்க செயினை திருடும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.
எறும்புகள்
கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான தீபான்சு காப்ரா என்பவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் எறும்புகள் குழுவாக சேர்ந்து தங்க செயினை தூக்கிச் செல்கின்றன. இந்த வீடியோவை பகிர்ந்து அதில் ஐபிஎஸ் அதிகாரியான தீபான்சு காப்ரா,"மிகச் சிறிய தங்க திருடர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ அப்போது சமூக வலை தளங்களில் அப்போது வைரலாக பரவியது.
வழக்கு பதிவு
இந்நிலையில் IFS அதிகாரியான சுசாந்தா நந்தா என்பவர் இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர்,"மிகச்சிறிய தங்க நகை கடத்தல்காரர்கள். எனக்கு ஒரே சந்தேகம் தான். இவர்கள் மீது எந்த IPC பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ மீண்டும் சமூக வலை தளங்களில் பரவ துவங்கியுள்ளது.
இந்நிலையில், "இவர்களை சிறையில் அடைப்பது சிரமம்" என்றும் "எறும்புகளுக்காக ஏதேனும் சட்ட விதிகள் இருக்கின்றனவா?" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
வெளியேறிய ரோகித் சர்மா.. இந்திய அணியின் புது கேப்டனான பும்ரா! இங்கிலாந்து தொடாரின் லேட்டஸ்ட் அப்டேட்
தொடர்புடைய செய்திகள்