'மியா கலிஃபாவின் முகத்தை வைத்து இளைஞர் செய்த செயல்'... 'என்ன ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க'... வீடியோவை பார்த்து கடுப்பான மியா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய ரசிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த மியா கலிஃபா கடுமையாக அவரை திட்டி தீர்த்துள்ளார்.

மியா கலிஃபாவிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது சமூகம் சார்ந்து பல்வேறு நிகழ்வுகளுக்குக் குரல் கொடுத்து வரும் அவர், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.

அதோடு பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக அவர் குரல் கொடுத்து வரும் நிலையில், ரசிகர் ஒருவர் ஆர்வ மிகுதியில் செய்த செயல் மியாவை கடுமையாக எரிச்சல் அடையச் செய்துள்ளது. இந்திய ரசிகர் ஒருவர் மியா கலிஃபாவின் முகத்தைத் தனது காலில் டாட்டூ போட்டுக் கொண்டதோடு, அதை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் டாட்டூ போட்டவரின் முகம் தெரியவில்லை. ஆனால் அவரது காலில் மியா கலிஃபாவின் முகத்தை டாட்டூ வரைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதற்கிடையே இந்திய ரசிகரின் இந்த வீடியோவை பார்த்த மியா கலிஃபா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது மிகவும் பயங்கரமானது எனத் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த டாட்டூ நெட்டிசன்கள் மத்தியில் வைரலானது.

இந்த ஒரே ஒரு டாட்டூ அதனை வரைந்தவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல லட்சம் பின்தொடர்பாளர்களை பெற்றுக் கொடுத்துள்ளது. மியா கலிஃபாவின் டாட்டூவை போட்டுள்ள இந்திய ரசிகர், மியாவுக்கு நன்றி தெரிவித்துப் பதிலளித்திருப்பதுடன் அந்த வீடியோவை 4 மில்லியன் பேர் பார்த்திருப்பதாகவும், அவர்களுக்கும் எனது நன்றி எனக் கூறியுள்ளார்.

மியா கலிஃபாவை பொறுத்தவரை அவர் தனது உருவப்படத்தை மற்றவர்கள் உடலில் வரைவதையோ அல்லது டாட்டூ குத்திக் கொள்வதையோ விரும்பாதவர். கடந்த 2017-ம் ஆண்டு போர்ச்சுகலைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்கேட் என்பவர் மியா கலிஃபாவின் முகத்தைத் தனது காலில் பச்சை குத்திக் கொண்டார். இதனைப் பார்த்த மியா கலிஃபா இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது எனக் கடுமையாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்