'உஷாரா இருங்க'...'பள்ளிக்கு போக ஷூ போட போன மாணவி'...'திடீரென தலை காட்டிய நாகம்'...பகீர் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பள்ளி மாணவியின் ஷூவுக்குள்  நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

திருவனந்தபுரம் அடுத்த கரிக்ககொம் கோவில் பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர்,  காலையில் பள்ளிக்குப் புறப்படுவதற்காக தயாரானார்.  அப்போது அவரது தாயார் மாணவியின் ஷூவை எடுத்து மாணவிக்கு அணிவிக்க தயாரானார். அப்போது எதிர்பாராத விதமாக மாணவியின் ஷூக்குள் இருந்து குட்டி நாகப்பாம்பு ஒன்று தலைகாட்டியது. இதனால் மாணவியும், அவரது தாயாரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இதையடுத்து நிலைமையை சுதாரித்து கொண்ட மாணவியின் தாய், நாகப்பாம்பு வீட்டிற்குள் சென்று விட கூடாது என்பதற்காக, உடனடியாக ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து ஷூவை மூடி வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து கேரளாவில் பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த சுரேஷ் அந்த பாத்திரத்தை எடுத்துவிட்டு ஷூவில் இருந்து சீறி வந்த குட்டி நாகத்தை லாவகமாக பிடித்து டைல்ஸ் தளத்தில் விட்டார்.  

ஆனால் பாம்பால் ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்ததையடுத்து அந்தப் நாக பாம்பை பிடித்துச் சென்றார் சுரேஷ். மழைக்காலத்தில் மாணவர்கள் தங்களது ஷூக்களை அணிவதற்கு முன்னதாக, உள்ளே எதுவும் பூச்சிகள் உட்புகுந்திருக்கிறதா என்பதை பார்த்து அணிய வேண்டும். பெற்றோர்கள் இதில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என வாவா சுரேஷ் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

KERALA, COBRA, SCHOOL GIRL, SHOE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்