VIDEO: ‘ஹெலிகாப்டரில் வந்த மாப்பிள்ளை’!.. ‘கட்டுகட்டாக பணமழை’!.. ‘காரில் ஊர்வலம்’.. மிரள வைத்த கல்யாணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாப்பிள்ளையை வரவேற்க அவரது நண்பர்கள் லட்சக்கணக்கில் பணத்தை வானில் பறக்கவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரை சேர்ந்த தொழிலதிபர் மகன் ஒருவருக்கு திருமண விழா நடைபெற்றுள்ளது. அப்போது மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார். இதனை அடுத்து அவரை காரில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரை சுற்றி நின்ற மாப்பிள்ளையின் நண்பவர்கள் ரூ.500, ரூ.2000 நோட்டுகளை  கட்டுகட்டாக வானத்தை நோக்கி வீசி வரவேற்றுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வானில் வீசப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 90 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், மாப்பிள்ளையை வரவேற்க வானில் பணத்தை பறக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

MONEY, MARRIAGE, GROOM, VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்