கோயிலை சீரமைக்கும் போது கிடைத்த பழங்கால ‘வெள்ளி’ நாணயம்.. தீயாய் பரவிய தகவல்.. மளமளவென குவிந்த மக்கள்.. கடைசியில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பழங்கால கோயில் புனரமைப்பின் போது வெள்ளி நாணயங்கள் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள உம்மடிவரம் என்ற கிராமத்தில் பழங்கால மாசம்மா கோவில் உள்ளது. தற்போது இந்த கோயிலை புனரமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. அதற்காக கோயிலின் அருகே குழி தோண்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மழை பெய்துள்ளதால் சேரும் சகதியுமாக ஆகியுள்ளது. அதனால் இதை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பழங்கால வெள்ளி நாணயங்கள் தென்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் 19-ம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டவை என கூறப்படுகிறது. இந்த தகவல் தீயாய் பரவ, அக்கிராம மக்கள் கையில் கிடைத்த நாணயங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட நாணயங்கள் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலறிந்த வந்த வட்டாட்சியர், கோயிலில் கிடைத்த பழங்கால நாணயங்கள் அரசுக்கு சொந்தமானது என்றும், அதை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கிராம மக்களிடம் வலியுறுத்தினார். ஆனால் மக்கள் யாரும் திருப்பி தராததால் அவர்களிடம் நாணயங்களை வாங்கும் முயற்சியில்  அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்