செங்குத்தான மலை பாதை.. அசால்ட் செய்த வந்தே பாரத் ரயில்.. அமைச்சர் பகிர்ந்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் அதிவேக ரயில் என கருதப்படும் வந்தே பாரத் ரயில் மேற்கு தொடர்ச்சி மலையில் இரண்டு செங்குத்தான பாதைகளில் பயணம் செய்யும் வீடியோவை ரயில்வே துறை அமைச்சர் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | மறுமணம் குறித்து ஸ்டேட்டஸ் வைத்த பெண்?.. ஆத்திரத்தில் கணவன் செஞ்ச பகீர் காரியம்.. மதுரையில் பரபரப்பு..!
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள இரண்டு வந்தே பாரத் ரயில்களின் இயக்கம் குறித்து வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்த இரண்டு புதிய ரயில்களும் மும்பை - ஷீரடி மற்றும் மும்பை - சோலாப்பூர் வழித்தடங்களில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழித்தடங்கள் சிக்கலான மற்றும் செங்குத்தான மலை பகுதிகளைக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், வந்தே பாரத் ரயில் மும்பையின் புறநகரில் உள்ள மலைப்பகுதிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மும்பை - சோலாப்பூர் மற்றும் மும்பை - ஷீரடி வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிப்ரவரி 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Images are subject to © copyright to their respective owners.
மும்பை - சோலாப்பூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போர் காட் வழியாக இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் 455 கிமீ தூரத்தை 6.35 மணி நேரத்தில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மும்பை - ஷீரடி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தால் காட் வழியாக இயக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த பகுதியில் வந்தே பாரத் ரயில் 5.25 மணி நேரத்தில் 340 கிமீ தூரத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் இந்த இரண்டு ரயில் பாதைகளும் மிகவும் செங்குத்தானவை. இங்கு ஒவ்வொரு 37 மீட்டர் தூரத்திற்கும் ஒரு மீட்டர் உயரம் அதிகரிக்கும். பொதுவாக இப்பகுதியில் ரயிலை இயக்க பின்புறத்தில் இருந்து பேங்கர்கள் எனப்படும் இயந்திரம் பயன்படுத்தப்படும். ஆனால், வந்தே பாரத் ரயில் அதன் உதவி இன்றியே இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வந்தே பாரத் ரயில்களின் பரிசோதனை ஓட்ட வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.
Also Read | ரயில் தண்டவாளத்தையே கொள்ளையடித்த கும்பலா.? அதுவும் 2 கிமீ நீளத்துக்கு.. யாரு சாமி இவங்க..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்