'கொரோனா செக் பண்ணனும்னு அர்த்த ராத்திரியில் நுழைந்த திருடர்கள்...' '8 மாச குழந்தை கழுத்துல கத்தி...' - திக்குமுக்காடி போன குடும்பம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திரப்பிரதேசத்தின் ஒரு வீட்டில் கொரோனா பரிசோதிக்க வந்ததாக கூறி சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், 1 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் காஜியாபாத்தின் காவி நகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 01:30 மணியளவில், கூரிய ஆயுதங்களுடன் சுமார் 6 பேர் சமையலறை ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் 75 வயதான போபால் சர்மா தனது மனைவி, மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.

மேலும் கொள்ளையர்கள் வீட்டில் நுழையும் சத்தம் கேட்டு போபால் சர்மாவின் மகள் பிரியா எழுந்து பார்த்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த 6 மர்ம நபர்களை கண்டு கத்தியுள்ளார். நாங்கள் அனைவரும் அரசு ஊழியர்கள், கொரோனா பரிசோதிக்க வந்துள்ளோம் என கூறி சமாளித்துள்ளனர் கொள்ளையர்கள்.

தீடீரென மர்ம நபர்களில் சிலர் துப்பாக்கி எடுத்து மிரட்ட தொடங்கியுள்ளனர். தப்பி ஓடிய பிரியா என்பவர் சகோதரியும் குடும்பத்தின் மற்ற பெண்களும் தூங்கிக்கொண்டிருந்த தனது அறைக்கு ஓடியுள்ளார். இந்நிலையில் கொள்ளையர்களில் சிலர் வீட்டின் மற்றொரு அறைக்கு சென்று வீட்டில் இருந்த 8 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியுள்ளனர்.

அதையடுத்து மற்றொரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த ஷர்மாவும் பிரியாவின் கணவரும் சலசலப்பைக் கேட்டு, எழுந்து பிரியாவின் அறைக்கு விரைந்தனர். ஆனால் குழந்தை கத்திமுனையில் கொள்ளையர்களின் கையில் இருப்பதால் தங்களால் ஒன்னும் செய்ய முடியவில்லை, அதையடுத்து பிரியாவின் குழந்தை மற்றும் ஷர்மாவை பிணை கைதிகளாக கொண்டு வீட்டின் மற்ற அனைவரையும் குளியலறையில் பூட்டியுள்ளனர்.

தங்க நகைகள் மற்றும் பணம் இருக்கும் பீரோவை காட்ட சொல்லி அதிலிருக்கும் ரூ .1 லட்சம் ரொக்கம் மற்றும் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் அதிகாலை 4 மணியளவில் ஷர்மாவையும் குழந்தையையும் வீட்டில் உள்ளே பூட்டி கொள்ளைகள் தப்பித்து சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தை ஐஎஸ்பி பிரிவு 395 மற்றும் 397 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி காஜியாபாத் கலாநிதி நைத்தானி தெரிவித்தார்.  மேலும் சந்தேக நபர்களை கைது செய்ய போலீசார் ஐந்து குழுக்களை அமைத்துள்ளனர். மேலும், அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக போலீசார் தரப்பு கூறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்