'ஒரு வீட்ல கூட ஆளு இல்ல...' 'கிராமமே காலியா இருக்கு...' 'கொரோனா செக் பண்ண போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...' - எல்லாரும் எங்க போய்ட்டாங்க...?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஒட்டுமொத்த கிராம மக்கள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பரிசோதனைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தான் கைக்கொடுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவரும் நிலையில், பரிசோதனைக்கு பயந்து கிராம மக்கள் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகார் பகுதியில், Aultari மற்றும் Jamtari கிராமங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த தகவலானது Kuta Chaurani கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினருக்கு தெரிந்துள்ளது.

இதன் காரணமாக கொரோனா பரிசோதனைக்கு பயந்து கொண்டு அருகில் இருந்த வனப்பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து கூறிய அப்பகுதியில் இருந்த சிலர், 'கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் தாங்களுக்கு வராத கொரோனா கூட வந்து விடும்' என பழங்குடியினர் பயப்படுவதாக கூறிவருகின்றனர்.

அதையடுத்து அந்த சமூகத்தில் ஓரளவு படித்தவர்கள் மூலம் பழங்குடியின மக்களுக்கு பரிசோதனை குறித்து எடுத்துக்கூற அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஒரு ஊரே கொரோனா பரிசோதனைக்கு பயந்து வனப்பகுதிக்குள் ஒளிந்துகொண்டுள்ள சம்பவம், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வும், அச்சமும் இன்னும் மக்களுக்கு சேரவில்லை என்பதையே காண்பிக்கிறது எனலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்