500 மீ ஆழமுள்ள பள்ளத்தாக்கு.. திருமணத்தில் கலந்துகொள்ள சென்ற உறவினர்களுக்கு நேர்ந்த சோகம்.. பிரதமர், குடியரசுத்தலைவர் இரங்கல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரகாண்ட் மாநிலத்தில் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சோகம்
உத்திரகாண்ட் மாநிலம், பவுரி மாவட்டத்தில் உள்ள பிரோன்கல் பகுதியில் நேற்று இந்த துரதிருஷ்ட சம்பவம் நேர்ந்திருக்கிறது. இரவு நேரத்தில் திருமணத்தில் கலந்துகொள்ள பேருந்தில் சென்றிருந்த உறவினர்கள் விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த பேருந்து 500 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்திருக்கிறது. பேருந்தில் 45 பேர் இருந்ததாகவும் அதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், விபத்து நேரந்த இடத்தில் இருந்து 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. மாநில காவல்துறை தலைவர் அசோக் குமார் இதுபற்றி பேசுகையில், "துமகோட்டின் பிரோகல் பகுதியில் நேற்று இரவு நடந்த பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். காவல்துறை மற்றும் SDRF (மாநில பேரிடர் மீட்புப் படை) ஒரே இரவில் 21 பேரைக் காப்பாற்றியது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
இரங்கல்
இந்நிலையில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இதுகுறித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில், விபத்து குறித்த தகவல்களை கேட்டு வேதனை அடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே பிரதமர் அலுவலகம் இதுபற்றி செய்திருந்த ட்வீட்டில்,"உத்தரகாண்ட் மாநிலம் பௌரியில் நடந்த பேருந்து விபத்து இதயத்தை உலுக்குகிறது. இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் முழுவதும் உயிரிழந்த குடும்பத்தினரை பற்றியே இருக்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிப்படைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே உத்திரகான்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினருடன் மாநில அரசு துணை நிற்கும் எனத் தெரிவித்திருக்கிறார். திருமணத்தில் கலந்துகொள்ள சென்றவர்களின் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எப்போவும் போல வேலைக்கு போன பொண்ணு, அன்னைக்கி திரும்பி வரவே இல்ல".. கால்வாயில் கிடந்த உடல்.. நாட்டையே உலுக்கிய பயங்கரம்!!
- ஜாதகத்தில் ஏற்படும் சிக்கல்?.. பரிகாரமாக ஜெயிலுக்கு போக விரும்பும் மக்கள்.. சிறை நிர்வாகம் எடுத்த வினோத முடிவு..!
- 38 வருஷத்துக்கு முன்னாடி காணாமல்போன ராணுவ வீரரின் உடல் கண்டுபிடிப்பு .. முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற நல்லடக்கம்.. கலங்கிப்போன மக்கள்..!
- "பள்ளி மாணவிகளுக்கு என்னங்க ஆச்சு??.." கும்பலாக கதறிய மாணவிகள்.. இந்தியாவை பீதியில் உறைய வைத்த சம்பவம்..
- சூரியனை சுத்தி தோன்றிய வானவில் வட்டம்.. அதுவும் 22 டிகிரிக்கு.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய சுவாரஸ்ய தகவல்..வைரல் வீடியோ..!
- "ஒரு வருஷத்துல பேரக்குழந்தைய பெத்துக் குடுங்க, இல்லன்னா.." - மகன், மருமகளுக்கு எதிராக.. கோர்ட் வாசலை நாடிய தம்பதி
- "1 கோடி ரூபாய் நிலம்.." முஸ்லீம் மக்களுக்காக இந்து சகோதரிகள் செய்த விஷயம்.. "20 வருஷம் கழிச்சு அப்பா ஆசைய நிறைவேத்திட்டோம்.."
- 'பிறந்து 2 வாரம் தான் ஆச்சு'... 'இது என்ன பாம்புன்னு தெரியுமா'?... ஆச்சரியத்தில் உறைந்து போன வனத்துறை அதிகாரிகள்!
- 'ஒரு வீட்ல கூட ஆளு இல்ல...' 'கிராமமே காலியா இருக்கு...' 'கொரோனா செக் பண்ண போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...' - எல்லாரும் எங்க போய்ட்டாங்க...?
- ‘மனசு ரொம்ப வேதனையா இருக்கு’.. ‘என் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டா..?’ முன்னாள் கிரிக்கெட் வீரர் உருக்கமான விளக்கம்..!