VIDEO: 'ரயிலோட பிரேக் சிஸ்டம் ஃபெயிலியர்...' என்ன நடக்க போகுதோ...? 'சீட் நுனியில் பயணிகள்...' 'உச்சக்கட்ட த்ரில், திடீர்னு...' - பதறவைக்கும் சிசிடிவி வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரகாண்டில் இரயில் ஒன்று 35 கிலோமீட்டர் வரை பின்னோக்கி சென்ற சம்பவம் பயணிகளை அச்சமடைய செய்துள்ளது.

உத்தரகாண்டில் புர்னகிரி சதாப்தி விரைவு ரயில் சுமார் 35 கிலோமீட்டர் தூரம் வரை பின்னோக்கி சென்றுள்ளது.

புர்னகிரி சதாப்தி விரைவு ரயில், தண்டவாளத்தில் மாடுகள் நின்றதால் ரயில் ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். அப்போதும் ரயில், ஒரு மாடு மீது மோதிவிட்டதாகவும் அதன் பிரேக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டு ரயில் பின்னோக்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது

காத்திமா ரயில் நிலையம் வரை பின்னோக்கி சென்ற இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் சீட் நுனியில் பெரும் அச்சத்தில் உறைந்திருந்தனர்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக ரயில் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் ஆபத்தின்றி உயிர்தப்பி, பயணிகள் பின்னர் பேருந்துகளில் தன்காபுர் அனுப்பி வைக்கப்பட்டனர். சில பயணிகள் மாற்று ரயில் மூலம் அவர்கள் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர்

புர்னகிரி சதாப்தி விரைவு ரயில் வேகமாக பின்புறம் கடந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்