ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய 'இளைஞர்'... சுத்தி எல்லாரும் வேடிக்க பாத்துட்டு நின்னுப்போ... செம 'தில்லா' ஆத்துல குதிச்சு... ரிஸ்க் எடுத்த 12 வயது 'சிறுவன்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரகாண்ட் மாநிலம்த்தில் 12 வயது சிறுவன் ஒருவனின் வீர செயல் பாராட்டை பெற்று வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம், நைனிடால் மாவட்டத்தின் ராம்நகர் அருகே அமைந்துள்ளது கோசி என்னும் ஆறு. அப்போது அந்த ஆற்றின் பாலம் ஒன்றில் இருந்து 22 வயது இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்துள்ளார். ஆற்றில் குதித்த இளைஞர், தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ள நிலையில், அங்கிருந்த சில நபர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு எந்த முயற்சியும் செய்யாமல் இருந்துள்ளனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 12 வயது சிறுவன், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ஆற்றில் குதித்து தனது வயதிற்கு இரண்டு வயதை ஒத்த இளைஞரை மீட்க முயன்றான். தொடர்ந்து, தண்ணீரில் மூழ்கியதால் மயக்க நிலையில், தண்ணீரின் நடுவில் இருந்த பாறை ஒன்றின் அருகே இளைஞரை பத்திரமாக மீட்டு கிடத்தியுள்ளான். இது தொடர்பாக, தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கையில், இளைஞர் உயிருக்கு போராடுவதை பார்த்ததும் அந்த 12 வயது சிறுவன் உடனடியாக ஆற்றில் குதித்து, ஒரு 15 நிமிடம் கடுமையான போராட்டத்திற்கு பின் இளைஞரை மீட்டுள்ளான் என தெரிவித்தனர்.

போலீசார் விசாரணையில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் அப்பகுதி எம்.எல்.ஏ, சிறுவனின் இந்த துணிச்சல்மிக்க செயலுக்கு விருது வழங்க வேண்டி முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்