மதுராவில் 581 கிலோ போதைப் பொருளை திண்ற எலிகள்?.‌‌. நடந்தது என்ன? கோர்ட்டில் விளக்கமளித்த போலீசார்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவில் எலிகள், 581 கிலோ போதைப் பொருளை திண்றதாக போலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | "தெய்வமே.. வேலை கிடைச்சிடுச்சா".. கூகுளில் செலெக்ட் ஆன மகன்.. சந்தோஷத்தில் அம்மா கொடுத்த ரியாக்ஷன்.. வீடியோ..!

வினோதமாகத் தோன்றினாலும், மதுரா காவல்துறை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், எலிகள் 581 கிலோ போதைப் பொருளை திண்றதாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஷெர்கர் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலையத்தின் கிடங்குகளில்  வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ போதைப் பொருளை எலிகள் சாப்பிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மே 2020 இல், மதுராவில் ஒரு லாரியில் போதைப் பொருளை கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஷெர்கர் பகுதியில் உள்ள ஜட்வாரி கிராமம் அருகே லாரியை மறித்து, வாகனத்தில் இருந்து  மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  போதைப் பொருள் மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் அடுத்த கட்ட நகர்வாக இந்த ஆண்டு தொடக்கத்தில், என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் மீட்கப்பட்ட போதைப் பொருளை ஆஜர்படுத்துமாறு மதுரா காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் மதுரா போலீசார், எலிகள் 581 கிலோ போதைப் பொருளை திண்றதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மேலும் "எலிகள் சிறியதாக இருந்தாலும் போலீஸ்க்கு அவை பயப்படுவதில்லை".. என நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

மேலும் இவ்வழக்கில் நீதிமன்றம், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை எலிகள் உட்கொண்டது என்பதற்கான ஆதாரத்தை வழங்கவும் போலீஸ்க்கு உத்தரவிட்டது.

போலீஸ் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருளை ஏலம் விடவும் அல்லது அகற்றவும் ஐந்து அம்ச வழிமுறைகளையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Also Read | சூர்யா சிவாவை சஸ்பெண்ட் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. வெளியான பரபரப்பு அறிக்கை..!

UTTARPRADESH, POLICE, CLAIMS, RATS, DRUGS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்