ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த பயங்கரம்.. இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் செஞ்ச பகீர் காரியம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேச மாநிலத்தில் தனது நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | அடி தூள்.. இனி 10, 20₹ நாணயங்களை வாங்கித்தான் ஆகணும்.. அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு.. முழுவிபரம்..!

உத்திர பிரதேச மாநிலம், சித்தாப்பூர் அருகே உள்ள குளோரிஹா பகுதியில் கடந்த 8 ஆம் தேதி இளம்பெண் ஒருவருடைய உடல் பாகங்கள் கிடந்திருக்கின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வில் இறங்கினர். இறந்துபோன, பெண் யார்? என்ற விசாரணையில் காவல்துறையினர் இறங்கினர். அதன் பலனாக அது ஜோதி என்ற சினேகா என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து, ஜோதியின் கணவர் பங்கஜ் மவுர்யாவிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். இதில், பங்கஜ் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே அவர்மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பங்கஜ் நடந்த உண்மைகளை கூறியிருக்கிறார். அவரது வாக்குமூலத்தை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

ஜோதியின் கணவர் பங்கஜ் போலீசாரிடம் தனது மனைவிக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், வேறு ஒரு ஆணுடன் அவர் தொடர்பில் இருந்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பலமுறை எடுத்துக்கூறியும் அவர் கேட்காததால் தனது நண்பர் துர்ஜன் பாசி என்பவருடன் இணைந்து மனைவியை கொலை செய்ததாக போலீசிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். கொலை செய்தது மட்டுமன்றி சினேகாவின் உடலை பல பாகங்களாக வெட்டி, வனப்பகுதியில் வீசியதாகவும் பங்கஜ் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியை சேர்ந்த ஷ்ரத்தா எனும் இளம்பெண் தனது லிவிங் டுகெதர் பார்ட்னரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் கைதான அஃப்தாப் போலீஸாரிடத்தில் ஷ்ரத்தாவின் உடலை 35 பாகங்களாக வெட்டி வீசியதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், உத்திர பிரதேசத்தில் பங்கஜ் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து தனது மனைவியை கொலை செய்து அவருடைய உடலை பல பாகங்களாக வெட்டி வீசியதாக வாக்குமூலம் அளித்திருப்பது நாட்டையே திடுக்கிட செய்திருக்கிறது.

Also Read | "நான் ராமர்.. சந்திரபாபு ராவணன்".. மேடையை அதிர வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்.. முழு விவரம்..!

UTTARPRADESH, MAN, FRIEND, ARREST, WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்