'சிறுவனை விடாம தொரத்தும் பாம்பு...' 'ஒரே மாசத்துல 8 தடவ கடி...' - எந்த ஏரியா போனாலும் தேடி வரும் அதிசயம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரப்பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனை ஒரே மாதத்தில் 8 முறை பாம்பு கடித்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ராம்புர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் யாஷ்ராஜ் மிஷ்ரா. இவரை பாம்புகள் பல முறை கடிப்பதும், அதற்காக அடிக்கடி மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுகுறித்து கூறும் யாஷ்ராஜ் மிஷ்ராவின் தந்தை சந்திரமௌலி மிஷ்ரா, என் மகனை அடிக்கடி பாம்பு கடிப்பது எனக்கு மட்டுமில்லை எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஏன் மருத்துவர்களுக்கும் கூட குழப்பத்தை உண்டாக்குகிறது. தற்போது மூன்றாவது முறை ஒரே பாம்பால் எனது மகன் கடிபட்டதை அடுத்து, அவனை பஹதுர்புர் கிராமத்தில் உள்ள எனது உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டேன்.
அங்கே சென்றும் கூட அவன் அதே பாம்பை பார்ப்பதாக கூறுகிறான். அவன் என்னிடம் சொல்லிய அடுத்த நாளே அந்த பாம்பு அவனை கொத்தியது. அதனால் தான் தற்போது அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுவரை அவனை 8 முறை பாம்பு கடித்துள்ளது. நாங்கள் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து பார்த்தோம், பாம்பாட்டியை வைத்து பாம்பு பிடிக்க முயன்றோம், அதோடு பாம்பு பிடிப்பவர்கள் கூறும் வைத்தியங்களையும் பார்ப்போம், பல பூஜைகளும் செய்துவிட்டோம். ஆனால் இதுவரை ஒரு பலனும் இல்லை.
ஏன் எங்கள் பையனை மட்டும் பாம்பு குறி வைக்கிறது எனத் தெரியவில்லை. இதனாலேயே என் மகன் மன உளைச்சலில் அவதி படுகிறான். எப்போதும் பாம்பு குறித்த அச்சத்தோடு இருக்கிறான். எப்போது இதற்கு ஒரு முடிவு வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.' என மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கிறார் சிறுவனின் தந்தை சந்திரமௌலி.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: '16 அடி நீளம்... கொடிய விஷம்... பரவால்ல... வா, விளையாடலாம்'!.. சிறுமியின் நடுங்கவைக்கும் சாகசங்கள்!.. பாம்புடன் நட்பானது எப்படி?.. பரபரப்பு பின்னணி!
- VIDEO: 'என்ன இது...! உள்ள ஏதோ நெளியுது...' 'வெஸ்டர்ன் டாய்லெட்டில் நுழைந்த பாம்பு...' 'தப்பிச்சோமோ பிழைச்சோமா-ன்னு எஸ்கேப் ஆகாம இளைஞர் பார்த்த வேலை' - வைரல் வீடியோ...!
- 'டாய்லெட்டில் ஃபிளெஷ் செய்ய போன இளம்பெண்'... 'ஒரு நொடி அப்படியே அதிர்ந்து நிற்க வைத்த காட்சி' ... பகீர் சம்பவம்!
- 'விஷ பாம்பை விட்டு மனைவியை கொன்ற வழக்கில் அதிரடி திருப்பம்...' இந்த கொலை எதற்காக நடந்துள்ளது தெரியுமா...? - அதிர வைக்கும் பல தகவல்கள்...!
- ‘இதுவரை யார் கண்ணுலயும் தென்படல’.. 129 வருஷத்துக்கு அப்புறம் கண்டுபிடிக்கப்பட்ட ‘அரியவகை’ பாம்பு.. எங்கே தெரியுமா..?
- பாத்ரூம் மூலையில பதுங்கியிருந்துச்சு... காட்டுல கொண்டு போய் விட்றலாம்னு இருந்தப்ப தான்... 'பைக்குள்ள' அந்த சம்பவத்த பாத்து... ஆடிப்போயிட்டேன்!
- "இந்த பாம்பு தான் என்னை கடித்தது!".. நாக பாம்பை உயிரோடு பையில் போட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த இளைஞர்!
- "என்ற அம்மச்சியே".. 'கிளைமேக்ஸ் அலறல்தான் உச்சம்'!.. 'மனசுல' டிஸ்கவரி சேனல் பியர் கிரில்ஸ்னு நெனைப்பு'!.. 'தெறிக்கவிடும்' வீடியோ!
- 'வீட்ல எலி தொல்ல ஜாஸ்தியா இருக்கு!'.. பாம்புக் கடியால் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கு!.. பாம்பு பிடிப்பவர் பகிரங்க வாக்குமூலம்!.. பதறவைக்கும் பின்னணி!
- "தில் இருந்தா தொட்ரா பாக்கலாம்!".. 'வெறித்தனம்' காட்டிய கோழி!.. 'குஞ்சுகளைக் காக்கும்' மரணப் போராட்டம்! தெறிக்கவிடும் வீடியோ!