அடிக்கடி வயிறு வலி...! ஸ்கேன் பண்ணி பார்த்தப்போ...' 'ஒண்ணு ரெண்டு பொருள்னா பரவா இல்ல...' எப்படி இவ்வளவு பொருட்கள்...? - அதிர்ந்து போன டாக்டர்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திரப்பிரதேச மாநிலத்தில் வயிற்று வலிக்காக மருத்துவமனை சென்ற 18 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து ஏராளமான இரும்பு பொருட்களை எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியின் பத்வா கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயதுள்ள கரண் என்னும் இளைஞருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடிவயிறு வலித்துள்ளது.

இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பெற்றோர்கள் மருத்துவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில், அவரின் வயிற்றில் இரும்புப் பொருட்களான கூர்மையான ஸ்குருட்ரைவர்கள், கரடு முரடான கருவிகள், நான்கு தையல் ஊசிகள் மற்றும் 30 நகங்களும் இருந்துள்ளன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவர்கள் நேற்று அறுவை சிகிச்சை செய்து எல்லாப் பொருட்களையும் நீக்கியுள்ளனர்.

கரணின் பெற்றோர் இதுகுறித்து கூறும் போது, என் பையன் கரணுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரண் இத்தனைப் பொருட்களை எப்போது? எப்படி விழுங்கினான் என்பது எங்களுக்குத் தெரியாது' எனக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கூறிய மருத்துவர்கள், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான் எனவும், இன்னும் ஏழு நாட்கள் தொடர்ந்து மருத்துவமனை சிகிச்சையில் இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்