பாம்பு கடிச்சப்ப உத்ரா 'கத்தாதுக்கு' காரணம் என்ன?... கடைசியாக 'உண்மையை' உடைத்த கணவன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இளம்பெண் உத்ரா பாம்பு கடித்தபோது கத்தாமல் இருந்ததன் காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

Advertising
Advertising

முதன்முறை பாம்பு கடித்த பிழைத்த கேரள இளம்பெண் உத்ரா, 2-வது முறை பாம்பு கடித்தபோது இறந்து போனார். இது கேரள மாநிலம் முழுவதையும் உலுக்கியது. இதையடுத்து உத்ராவின் கணவன் சூரஜையும், அவருக்கு உதவி செய்த பாம்பாட்டி  சுரேஷையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்முறை பாம்பு கடித்தபோது கத்திய உத்ரா, 2-வது முறை பாம்பு கடித்தபோது ஏன் கத்தவில்லை என்பதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணையில் சூரஜ், ''கடந்த 6-ம் தேதி உத்ராவின் வீட்டுக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பாம்பு கொண்டு சென்றதுடன், தூக்க மாத்திரையும் எடுத்துச் சென்றேன். மார்ச் 2-ம் தேதி அணலிவகை பாம்பு கடித்த அன்று சத்தம் போட்டு அலறினார். எனவே, இரண்டாவது முறை பாம்பைக் கடிக்க விடும்போது அவர் சத்தம்போடாமல் இருப்பதற்காக அதிகமான தூக்க மாத்திரை கொடுத்து மயங்க வைக்க முடிவு செய்தேன். எனவே, பாயசத்திலும் பழச்சாற்றிலும் தூக்கமாத்திரை கலந்து, இரண்டு முறையாகக் கொடுத்தேன். அதனால் பாம்பு கடிக்கும்போது உத்ரா கத்தவில்லை,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்