மோடியின் அடுத்த சர்ச்சைகள்.. 73லியே மெயில், 87லியே டிஜி கேம்.. 7,8 வருஷங்கள் அட்வான்ஸா? நெட்டிசன்கள் கேள்வி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜம்மு-காஷ்மீர் பகுதியின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃ வீரர்கள் 44 பேர் பலியாகியதை அடுத்து,  தாக்குதல் நிகழ்த்தியதாகக் கூறப்பட்ட ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் மீது இந்தியா பதில் தாக்குதல் நிகழ்த்தியதாகவும், அதில் அந்த இயக்கத்தைச் சேர்ந்த பலரும் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

அண்மையில் நியூஸ் நேஷன் சேனலுக்கு இதுபற்றி பேட்டியளித்த பிரதமர் மோடி, ‘பால்கோட்டில் பதில் தாக்குதல் நிகழ்த்திய அன்று, வானிலை சற்று மோசமாக இருந்ததால், தாக்குதலை பிறிதொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்தபோது, நான்தான் மேகங்கள் நம்மை ரேடார்களிடம் இருந்து மறைத்து காக்கும் என அறிவுரை கூறினேன்’ என கூறியிருந்தார்.

சமூக வலைதளங்களில் வைரலான மோடியின் இந்த கருத்துக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் நெட்டிசன்களிடம் இருந்து எகிறிய நிலையில், அதற்குள் அடுத்ததாக 1987-88-ம் ஆண்டுகளில் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தியதாக மோடி கூறியுள்ளது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது.

அத்வானியின் பிரச்சாரத்தை தனது கேமராவில் கலர் ஃபோட்டோவாக படம் பிடித்து, மெயில் மூலம் டெல்லிக்கு அனுப்பியதாகவும், அதை பிரிண்ட் போட்டு அத்வானி பிரம்மிப்பாக எவ்வாறு இந்த கலர்மயமான போட்டோவை எடுத்தீர்கள் என்று அத்வானி தன்னைக் கேட்டதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

ஆனால் 1973-ம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட இ-மெயில், பின்னர் 1990- 1995-ஆம் ஆண்டுவாக்கில் இணையதளம் பிரபலமானபிறகே பரவலாக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டதாகவும் நெட்டிசன்கள் கூறி வருவதால், மோடியின் இருவேறு கருத்துக்களுமே இணையத்தில் வைரலாகி வருகின்றன.

BJP, NARENDRAMODI, DIGITALCAMERA, EMAIL, FLIGHT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்