‘இந்தியாவின் கோரிக்கையை ஏற்று’... ‘உலுக்கி எடுக்கும் கொரோனா நேரத்திலும்’... ‘ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மருந்துகள் அனுப்பிய நிலையில், ஆயிரம் கோடி மதிப்பிலான ஏவுகணைகள் மற்றும் எதிர்ப்பு நீர் மூழ்கி ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பாக சண்டை போட்டுக்கொண்டு இருந்த நாடுகள் கூட தற்போது கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக போராட கைகோர்த்து உள்ளன. முக்கியமாக, அமெரிக்காவும் ரஷ்யாவும் நட்பாகி உள்ளது. இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டில் அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளி என்ற அந்தஸ்து வழங்கப்பட்ட இந்தியா, ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தபடி,  ரூ.1,178 கோடிக்கு மதிப்புள்ள 29 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஆயுதங்கள் மூலம், இந்தியா எதிரி நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியும் என்றும், கடல் பாதுகாப்பு திறன் மேம்படும் என்றும், இந்தியாவுக்கு எந்த கஷ்டமும் இருக்காது என்றும், அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் இதற்கான கடிதத்தை அந்நாட்டு காங்கிரஸ் அவைக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் ஒப்புதல் அளித்தவுடன் இந்த ஏவுகணைகள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். அதன்படி ஹார்பூன் பிளாக் 11 (Harpoon Block II ) மற்றும் டார்ப்பீடோஸ் (torpedoes) ஏவுகணைகளை அமெரிக்கா ஏற்றுமதி செய்ய உள்ளது.

முன்னதாக கொரோனா சிகிச்சைக்கு தேவையான இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை, மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய இந்தியா தடை விதித்தது. அப்போது, இந்தியா மருந்தை தரவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இதையடுத்து தடை நீக்கப்பட்டு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதால், ட்ரம்ப் இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்