பேச மறுத்த பக்கத்து வீட்டுப்பெண்... போன்லையும் பிளாக்.. இளைஞர் செஞ்ச பயங்கரம்... தட்டிதூக்கிய போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேச மாநிலத்தில் தன்னிடம் பேச மறுத்த பக்கத்து வீட்டுப் பெண்ணை தாக்கியிருக்கிறார் இளைஞர் ஒருவர். இந்நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "சாகுறதுக்கு முன்னாடி ஒருதடவை அவனை பார்த்துடனும்னு நெனச்சேன்".. ஒன்றரை வயதில் பிரிந்துபோன மகன்.. 25 வருஷத்துக்கு அப்பறம் நடந்த அதிசயம்..!

மறுப்பு

உத்திர பிரதேச மாநிலம், சுர்வயா டவுன் பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார் கவுதம். 21 வயதான இவர் தனது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் இளம்பெண்ணிடம் பேச முயற்சி செய்திருக்கிறார். மேலும், செல்போன் மூலமாக அவரை தொடர்புகொள்ள நினைத்திருக்கிறார். ஆனால், தொடர்ந்து ராஜ் குமார் கவுதமிடம் பேச அந்த பெண் மறுத்து வந்திருக்கிறார். மேலும், அவரது எண்ணையும் தனது செல்போனில் பிளாக் செய்திருக்கிறார் அந்த இளம்பெண். இதனால் ராஜ் குமார் கவுதம் மிகுந்த கோபமடைந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை அந்த இளம்பெண் அருகில் உள்ள சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றிருக்கிறார். அப்போது அவரை சந்தித்த கவுதம் தன்னிடம் பேச மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போது அங்கிருந்து இளம்பெண் நகர்ந்து செல்ல முயற்சித்திருக்கிறார். இதனால் மேலும் கோபமடைந்த கவுதம் அவரை கடுமையாக தாக்கியிருக்கிறார். இதனால் அங்கேயே மயங்கி விழ, அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து அவரை காப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இருப்பினும் மேல்சிகிச்சைக்காக வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

சிகிச்சை

தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் காயங்களுடன் தப்பித்திருக்கிறார் அந்த இளம்பெண். இந்நிலையில், ராஜ் குமார் கவுதமை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதுபற்றி பேசிய பதோஹி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அனில் குமார்," பாதிக்கப்பட்ட பெண் முதலில் ஆரம்ப சுகாதார நிலையில் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவர் உயர் சிகிச்சைக்காக வாரணாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் ஆபத்தான கட்டத்தில் இருந்த அவர் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக தற்போது நலமாக இருக்கிறார். கைது செய்யப்பட்ட ராஜ் குமார் கவுதம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Also Read | "அது உலகத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்னு".. மீட்டிங்கில் அதிரவைத்த எலான் மஸ்க்.. என்ன இப்படி சொல்லிட்டாரு..?

UTTARPRADESH, WOMAN, YOUTH, TALK, REFUSE, ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்