"தெரியாம பண்ணிட்டோம்.. ஏழைகள் வீட்டுல இனி திருடமாட்டோம்".. கடிதம் எழுதி பொருட்களை ஒப்படைத்த திருடர்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருடிய பொருட்களை மீண்டும் ஒப்படைத்த திருடர்கள், இனி ஏழைகள் வீட்டில் திருட மாட்டோம் என கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது.

Advertising
>
Advertising

உத்தரப்பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் திவாரி. வெல்டிங் தொழிலாளியான இவர், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்.

தனது தொழிலை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 40,000 ரூபாய் கடன் வாங்கிய தினேஷ், வெல்டிங் தொழிலுக்குத் தேவையான கருவிகளை வாங்கி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதியன்று, தனது வெல்டிங் கடைக்கு சென்ற தினேஷிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அதன் பூட்டு உடைக்கப்பட்டு, கடன் உதவியுடன், தான் வாங்கி வைத்திருந்த கருவிகள் மற்றும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் திருட்டு போயிருந்தது.

உடைந்து போன தினேஷ்

குடும்ப சூழ்நிலையும் மோசமாக இருக்க, தற்போது தொழிலுக்குத் தேவையான பொருட்களும், திருடு போனதால் மிகுந்த ஏமாற்றமடைந்தார் தினேஷ் திவாரி. உடனடியாக, காவல் நிலையம் சென்று, தனது வெல்டிங் கடையில் நடந்த திருட்டு பற்றி, புகாரளித்துள்ளார். ஆனால், அங்கு இன்ஸ்பெக்டர் யாரும் இல்லாததால், உடனடியாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனிடையே, கடையிலுள்ள கருவிகள் திருட்டு போன சில தினங்களிலேயே, அவை அனைத்தும், மூட்டை ஒன்றில் கட்டப்பட்டு,  தினேஷின் வீட்டில் இருந்து, சிறிது தூரத்தில் உள்ள காலி மைதானம் ஒன்றில் கிடந்துள்ளது.

திருடர்களின் கடிதம்

அந்த மூட்டையுடன் கடிதம் ஒன்றையும் திருடர்கள் எழுதி வைத்துள்ளனர். 'இதில் தினேஷ் திவாரியின் பொருட்கள் உள்ளன. எங்களுக்கு தகவல் கூறிய நபர், தினேஷ் திவாரி சாதாரண மனிதன் அல்ல என குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதன் பிறகு, உங்களை பற்றி வெளியே கேட்டுக் கொண்ட பிறகு தான், உங்களின் வறுமை நிலை என்ன என்பது தெரிய வந்தது. நாங்கள் மிகுந்த வருத்தம் அடைந்தோம். இதனால், உங்களின் பொருட்களை திருப்பித் தருகிறோம். இனிமேல் ஏழைகள் வீட்டில் திருட மாட்டோம்' என குறிப்பிட்டுள்ளனர்.

நிம்மதி

திருடு போன தனது வெல்டிங் கருவிகள், திரும்ப கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் தினேஷ் திவாரி. 'கடந்த 20 ஆம் தேதி, கடையைத் திறந்த போது, அங்கு பூட்டு உடைக்கப்பட்டு மொத்தம் 6 கருவிகள் திருட்டு போயிருந்தது. இதனால், நான் மிகுந்த வேதனை அடைந்தேன். உடனடியாக, காவல் நிலையம் சென்று புகாரளித்தேன். இன்ஸ்பெக்டர் அப்போது இல்லை என்பதால், அவர் வந்த பிறகு, உங்களின் இடத்திற்கு வந்து விசாரிப்பதாக கூறினார்கள். ஆனால், யாரும் வரவில்லை' என தினேஷ் தெரிவித்துள்ளார். எப்படியாக இருந்தாலும், திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைத்ததால் நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளார் தினேஷ்.

THIEF, FINANCIAL, UTTARPRADESH, SHOPKEEPER, உத்தரப்பிரதேச மாநிலம், பண்டா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்