‘சமோசா வியாபாரியின் ஒரு ஆண்டு டர்ன் ஓவர்..!’ அதிர்ந்துபோய் நின்ற ஐ.டி அதிகாரிகள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேசத்தில் சமோசா வியாபாரி ஒருவரின் ஆண்டு வருமானத்தைக் கேட்டு ஐ.டி அதிகாரிகள் அதிர்ந்துபோய் நின்ற சம்பவம் நடந்துள்ளது.

அலிகாரில் மிகவும் பிரபலமான ‘முகேஷ் கச்சோரி’ என்ற கடையில் எப்போதுமே கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கூட்டம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. காலை முதல் இரவு வரை கச்சோரி, சமோசா போன்ற உணவுகள் கிடைக்கும் இந்தக் கடையைக் கூட்டம் இல்லாமல் பார்க்கவே முடியாது என்கின்றனர். இந்நிலையில் இந்தக் கடையின் முதலாளி முகேஷ் மீது யாரோ ஒருவர் வருமான வரித்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்தக் கடையை மறைந்திருந்து கண்காணித்த வருமான வரித்துறையினர் அதன் ஆண்டு வருமானத்தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். விசாரணையில் வெறும் கச்சோரி, சமோசா விற்றே முகேஷ் ஆண்டுக்கு 60 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பாதிப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பல வருடங்களாக வரி கட்டவில்லை, கடையை ஜிஎஸ்டி-க்குக் கீழ் பதிவு செய்யவில்லை என்று கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுபற்றிப் பேசியுள்ள முகேஷ், “நான் கடந்த 12 வருடங்களாக இந்தக் கடையை நடத்தி வருகிறேன்.  எனக்கு வரி தொடர்பான விஷயங்கள் எதுவும் தெரியாது. இதுபற்றி யாரும் என்னிடம் எதுவும் கூறியதும் இல்லை. நாங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். சமோசா, கச்சோரி விற்றுதான் பிழைப்பு நடத்தி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

SAMOSA, TURNOVER, ITRAID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்