ரயில் வரும்போது நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிய பயணி! அதிர்ஷ்டவசமாக தப்பிய நிமிடங்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ரெயில் நிலையம் ஒன்றில் நடந்த சம்பவம் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Advertising
>
Advertising

உத்தர பிரதேச மாநிலம், பர்தானா என்னும் பகுதியில் ரெயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்ஃபார்மில் காலையில் சுமார் 9:45 மணியளவில், ரெயில் ஒன்று வந்துள்ளது.

ஆக்ராவில் இருந்து கிளம்பிய இந்த ரெயில், பர்தானா ரெயில் நிலையத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, அந்த ரெயில் அங்கிருந்து கிளம்பியதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், சுமார் 40 வயதை ஒத்த நபர் ஒருவர், அதில் ஏற முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த சமயத்தில், கால் இடறி அவர் விழவே ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்துள்ளார். இதனைக் கண்டதும் அங்கிருந்த பயணிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் என அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்த நொடியே ரெயில் வேகமாக சென்ற நிலையில், அங்கிருந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது.

இதனையடுத்து, ரெயில் சென்ற அடுத்த சில நிமிடங்களில் அந்த நபர் எந்தவித காயமும் இன்றி, பத்திரமாக அங்கிருந்து எழுந்து வந்தார். இதனைக் கண்ட பிறகு தான், அங்கிருந்தவர்கள் ஒரு நிமிடம் நிம்மதி அடைந்தனர். அந்த நபர் மிகவும் ஒல்லியாக இருந்ததால், தண்டவாளம் அருகே இருந்த பிளாட்ஃபார்ம் சுவரை ஒட்டி படுத்து இருந்துள்ளார். இதனால், விபத்து எதுவும் நேராமல் அவர் தப்பிக்கவும் முடிந்தது.

தொடர்ந்து, தான் அதிசயமாக உயிர் பிழைத்ததும் உடமைகளுடன் அங்கிருந்து எழுந்த அந்த நபர், கைகூப்பி நன்றி தெரிவித்த படி கடந்து சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் ஒரு நிமிடம் உறைய வைத்துள்ளது.

UP, RAILWAY, MAN, MIRACLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்