VIDEO : கடையில் இருந்தவர்களை 'தரதர'வென இழுத்து,,.. 'கண்முன்' தெரியாமல் தாக்கிய 'காவல்துறை'... 'வீடியோ'வால் வெடித்த 'சர்ச்சை'... நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் அசோக் சவுத்ரி, போலீசார் சிலருடன் இணைந்து கொண்டு கொரோனா தடுப்பு பணி நிமித்தமாக கடை கடையாக சென்று சோதனை செய்தனர்.

அப்ப்போது அப்பகுதியில் இருந்த கடை ஒன்றிற்கு சென்ற போலீஸ்காரர்கள், முகக்கவசத்திற்கு பதிலாக, கைகுட்டைகளை கட்டியிருந்த இரண்டு கடைக்காரர்களை வெளியே இழுத்து போட்டு, போலீஸ்காரர்கள் லத்தியால் சரமாரியாக அடித்தனர். உடன் அந்த அரசு அதிகாரியும் சேர்ந்து கடைக்காரர்களை தாக்கினார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள், இணையதளங்களில் வைரலாகி சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அந்த மாஜிஸ்திரேட்டை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டது. தாக்கப்பட்டது தொடர்பாக அந்த கடைக்காரர்கள் கூறுகையில், 'வாய், மூக்கு பகுதியை மூடுவதற்கு கைக்குட்டை பயன்படுத்தியதால் தான் போலீசார் மற்றும் அதிகாரி ஒருவர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினார். கைக்குட்டையை முகக்கவசமாக பயன்படுத்தலாம் என அரசே அறிவுறுத்தியுள்ளது. அதுவே, அதிகாரிகளுக்கு தெரியவில்லை' என தெரிவித்தனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்